india
2 மாசமா வீட்டு வாடகை கொடுக்கவில்லை… இளம் பெண்ணை கொடூரமாக தாக்கிய ஹவுஸ் ஓனர்…!
இரண்டு மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்காத இளம் பெண்ணை வீட்டில் உரிமையாளர் தாக்கிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
சொந்த வீடு என்பது பலரின் கனவாக இருக்கின்றது. தற்போது இருக்கும் விலைவாசிக்கும் சொந்த வீடு கட்டுவது என்பது இயலாத ஒரு விஷயமாக இருந்து வருகின்றது. இதனால் வாடகை வீட்டில் பலரும் வசித்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் மீது சொந்த வீட்டுக்காரர்களின் ஆதிக்கம் என்பது அதிக அளவில் இருக்கின்றது. வாடகை கொடுக்க சற்று தாமதமானால் போதும் உடனே அவர்களை கேவலமாக பேசுவது, திட்டுவது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றது.
ஆனால் இங்கு ஒரு வீட்டின் உரிமையாளர் வீட்டு வாடகை கொடுக்காத பெண்ணை மிகக் கொடூரமாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலம் சூரத்தில் இரண்டு மாத வீட்டு வாடகை செலுத்திய தவறியதால் இளம்பெண் மீது கொலவெறி தாக்குதல் நடத்தியிருக்கின்றார் உரிமையாளர். இந்த வீடியோவானது நேற்றிலிருந்து சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.
सूरत :
किराये का झंझट हाथापाई तक ले गया.मकान मालिक ने लड़की की पिटाई की.
इवेंट मैनेजमेंट से जुड़ी मुंबई की लड़की के साथ हाथापाई की तस्वीरें वायरल.
लड़की पर दो महीने का किराया नहीं चुकाने का आरोप.
(नोट : ऑडियो में अपशब्द है ) @CP_SuratCity pic.twitter.com/DVhrbKTgYY
— Janak Dave (@dave_janak) July 8, 2024
வீட்டில் உரிமையாளர் ஜெயேந்திர மாணவாலா என்பவருக்கு ராதை நகர் சொசைட்டியில் அவருக்கு சொந்தமாக ஒரு வீடு இருக்கின்றது. அந்த வீட்டில் இளம் பெண் தங்கள் குடும்பத்துடன் தங்கி இருக்கின்றார். இரண்டு மாதமாக அவர் வாடகை கொடுக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
அதனால் வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தியதை தொடர்ந்து இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து வீட்டில் உரிமையாளர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்வதாக இளம் பெண் புகார் அளித்தார். மேலும் தாக்குதலில் வீட்டில் உரிமையாளரின் கண்ணீர் காயம் ஏற்பட்டதை எடுத்து பெண்ணுக்கு எதிராக அவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றார்.