india
கன்னட ஸ்டார் தர்ஷன் சிக்கியது எப்படி? டெக்னிக்கல் மூளையை வைத்து துப்பு துலக்கிய தி ரியல் ”ஹீரோ” போலீஸ்!…
Dharshan: கன்னட சினிமாவில் மிகப்பெரிய ஸ்டாரான தர்ஷனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. ஆனால் அவரை கொலை குற்றத்திற்காக காவல்துறை சமீபத்தில் கைது செய்து இருப்பது கர்நாடகா மாநிலத்தினையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வந்த ரேணுகா சுவாமி என்பவர் திடீரென மர்ம்மான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் துண்டங்களாக மட்டுமே கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலையில் தர்ஷன் மட்டுமல்லாது காதலி பவித்ரா கவுடா உட்பட 17 பேர் கைது செய்யப்பட இருக்கின்றனர். இந்த வழக்கில் இருந்த முடிச்சை சரியாக கண்டுபிடிக்க உதவியது கர்நாடக துணை போலீஸ் கமிஷனர் எஸ் கிரிஷ் தான்.
இவர் இல்லையென்றால் இந்த கேஸ் அப்படியே முழ்கி இருக்கும் என்று தான் சொல்லலாம். தைரியத்துடன் செயல்பட்டு ஒரு மாநிலத்தின் மிகப்பெரிய ஸ்டாரை கைது செய்து இருக்கிறார் என மூத்த ஐபிஎஸ் அதிகாரி சந்தன் குமார் தெரிவித்து இருக்கிறார். மேலும் இவர் கிரிஷ் குறித்து பேசும் போது, இந்த கொலை வழக்கில் ஏற்கனவே நான்கு பேர் சரணடைந்தனர்.
இவர்கள் காசுக்காகவே வந்திருக்கிறார்கள் என தெரிந்தும் முதலில் கேஸை அத்தோடு மூடிவிடலாம் என்றே நினைத்தோம். ஆனால் இந்த கேஸில் கிரிஷுக்கு சந்தேகம் இருந்தது. சரணடைந்தவர்கள் கொடுத்த வாக்குமூலமும் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. அந்த நால்வரை சந்தன் மற்றும் கிரிஷ் இருவரும் அவர்கள் ஸ்டைலில் விசாரிக்க இறந்த ரேணுகாஸ்வாமியை தெரியாது என ஒப்புக்கொண்டனர்.
காசுக்காக சரணடைந்ததை கூறியதும், யார் காசு கொடுத்தது என்ற கேள்வி எழுந்தது. அவர்கள், ஆர்ஆர் நகரில் ரெஸ்டாரெண்ட் வைத்திருக்கும் வினய் என்பவரை கை காட்டினர். உடனே அவரிடம் விசாரிக்க காவல்துறை விரைந்தது. இந்த நேரத்தில் சரண்டர் விவகாரம் எப்படி நடக்கிறது என காவல்துறையிடமே சில மர்மநபர்கள் பேசி இருக்கின்றனர்.
வினய் தான் தர்ஷனுடன் நெருக்கமாக இருந்தவர். அவரிடம் விசாரித்த போது, ரேணுகா சாமி தர்ஷனின் காதலியான பவித்ரா கவுடாவிடம் அவதூறாக நடந்து கொண்டது. சோஷியல் மீடியாக்களில் ரேணுகா சாமி பவித்ராவிற்கு போட்ட ஆபாச கமெண்ட்கள் போட்டது என கோபத்தினை கிளறியது. உடல் கண்டெத்த இடத்தினை சுற்றி இருந்த சிசிடிவி காட்சிகள் சிலவற்றையும் கைப்பற்றினர்.
இதையடுத்து தான் தர்ஷனின் கைது சம்பவம் தொடங்கியது. காவல்துறையே இந்த விஷயத்தில் நம்பிக்கை இல்லாமல் தான் இருந்ததாக கூறப்படுகிறது. கன்னட சினிமாவின் சேலஞ்சிங் ஸ்டார் தர்ஷனை கட்டம் கட்டி தூக்கிய சம்பவம் நடந்து இருக்கிறது. சந்தன் குமார் இணைந்த ஒரு டீம் மைசூரு ஸ்டார் ஹோட்டலில் சுற்றி வளைத்தது. ஜிம்மில் இருந்த தர்ஷனை முன் காவல்துறை நின்றதுமே, நான் சொதப்பி விட்டேன் என தெரிகிறது. நீங்க போங்க. என் காரில் வருகிறேன் என்றாராம்.
இதையடுத்து, சந்தன் வருகிறீர்களா இல்லை என இழுக்க விஷயத்தின் தீவிரத்தினை புரிந்துக்கொண்ட தர்ஷன் போலீஸ் ஜீப்பில் ஏறி வந்து இருக்கிறார். தற்போது காவல்துறை அவரை பெங்களூரில் வைத்து இருக்கின்றனர். இது மாநிலத்தினையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து கிரிஷ் மற்றும் சந்தன் குமார் இருவரும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இவ்வளவு விரைவாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என யாரும் நினைக்கவில்லை. இல்லையென்றால் விஷயம் வேறு மாதிரி ஆகி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.