Connect with us

Cricket

T20 World Cup: கோலி, பண்ட் பேட்டிங் பொஷிஷன் முடிவு செய்யப்பட்டது எப்படி?

Published

on

டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் ஆல்ரவுண்டர்களுக்கு இடமளிக்கும் வகையில் விராட் கோலியை ஓப்பனராக களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்தது.

டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாகவே இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் எப்படியிருக்கும் என்று பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டு வந்தன. ஐபிஎல் தொடரில் ஓப்பனராக களமிறங்கி 741 ரன்கள் குவித்ததோடு ஆரஞ்சு கேப்பையும் வென்ற விராட் கோலியை ஓபனராகக் களமிறக்க ஆரம்பத்திலேயே முடிவு செய்யப்பட்டது.

ஆனால், முக்கியமான நம்பர் 3 இடத்தில் ரிஷப் பண்டை களமிறக்க இந்திய அணி நிர்வாகம் எடுத்த முடிவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரிஷப் பண்ட் டாப் ஆர்டரில் களமிறங்குவது ரொம்பவே அபூர்வமானது. கடந்த 2022 டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ரிஷப் பண்டை ஓப்பனராக இறக்கி பரிசோதனை முயற்சி செய்தது இந்திய அணிக்குக் கைகொடுக்கவில்லை.

அதேநேரம், இந்த உலகக் கோப்பை தொடரில் இடது கை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கவுன்டர் அட்டாக் கொடுக்கும் வகையிலேயே ரிஷப் பண்டை இந்திய அணி மூன்றாவது வீரராகக் களமிறக்கும் முடிவை எடுத்திருக்கிறது. விராட் கோலி ஓபனராக இதுவரை ஜொலிக்கவில்லை என்றாலும் இந்த உலகக் கோப்பை தொடரில் பண்ட் மூன்றாவது வீரராகக் களமிறங்குவது இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்தியிருப்பதோடு, கூடுதலாக ஒரு ஆல்ரவுண்டரை பிளேயிங் லெவனில் கொண்டுவரவும் உதவி செய்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

google news