Connect with us

govt update news

பட்டா மாற்றம் செய்ய வேண்டுமா..? இனி தேவையில்லாம அலைய வேண்டாம்… எப்படி செய்வது..?

Published

on

ஆன்லைனில் பட்டா மாற்றம் செய்யும் வசதியை தமிழக அரசு சமீபத்தில் கொண்டு வந்திருந்தது. இது தொடர்பான தகவலை நாம் தெரிந்து கொள்வோம்.

நில உரிமையாளராக இருக்கும் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டியது பட்டா. ஆவணம் வருவாய் துறை சார்பாக இந்த ஆவணம் வழங்கப்படுகின்றது. சர்வே எண், நில உரிமையாளரின் பெயர், நிலவகை, நிலம் அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் இந்த பட்டாவில் இடம் பெற்றிருக்கும், இந்நிலையில் ஆன்லைனில் பட்டா மாற்றம் செய்வது தொடர்பான தகவலை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

சொத்து பத்திரங்கள் பதிவு செய்யும்போது நில வரைபடம், பட்டா நகல் ஆகியவற்றின் பிரதிகள் சார்பதிவாளர் அலுவலகங்களில் கேட்கப்படும். பொதுமக்கள் பல சமயங்களில் இதற்காக அலைக்கழிக்கப்படுகின்றார்கள். தமிழ்நாட்டில் ஆன்லைனில் பட்டாக்கள் மாற்றும் வசதியை அண்மையில் தான் அரசு கொண்டு வந்திருந்தது. தமிழ்நாட்டில் ஒருவரின் பெயருக்கு சொத்துப்பதிவு செய்யப்படும்போது வருவாய் துறை மூலமாக பட்டாவும் பெயர் மாற்றம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்படும்.

அத்துடன் பழைய பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்யாதவர்கள் ஏற்கனவே பத்திர பதிவு செய்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழ் நிலம் வெப்சைட்டில் விண்ணப்பித்து நீங்கள் ஆன்லைனிலேயே பட்டா பெயர் மாற்றம் செய்து கொள்ள முடியும். இதற்கு https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று பெயர், மொபைல் எண், முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்களை கொடுக்க வேண்டும்.

இதை தொடர்ந்து மொபைல் நம்பர், ஐடி, பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே நுழைய வேண்டும். உட்பிரிவு இல்லாத நிலம், உட்பிரிவு உள்ள நிலம் ஆகிய லிங்கில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து பட்டா மாற்றம் செய்வதற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். பாகப்பிரிவினை பத்திரம், தான பத்திரம், கிரையப்பத்திரம், செட்டில்மெண்ட் பத்திரம், அக்கு விடுதலை பத்திரம், பிரிவினை பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை வைத்து நீங்கள் பட்டா பெயர் மாற்றம் செய்து கொள்ள முடியும்.

பத்திரப்பதிவு செய்ய உட்பிரிவுக்கு 600 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். உட்பிரிவு இல்லை என்றால் வெறும் 60 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதுமானது. பட்டா பெயர் மாற்றம் செய்ததற்கான சான்று வழங்கப்படும். இ சேவை மையத்திலும் அப்ளை செய்து பட்டா பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இதற்கு தேவையான சான்றுகள் மற்றும் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணம் செலுத்திய ரசீது உள்ளிட்ட நகல்களுடன் விஏஓ அலுவலகத்தை அணுக வேண்டும். இதை தொடர்ந்து ஒரு வாரத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்யப்படும். இதனை ஆன்லைனில் நீங்கள் டவுன்லோட் செய்து பெற்றுக் கொள்ள முடியும்.

google news