india
ரொம்ப தேசப்பற்றுள்ள திருடனா இருப்பாரோ.. ஐ லவ் இந்தியா.. திருடிய காரில் மன்னிப்பு கடிதம்..!
காரை திருடிவிட்டு மன்னிப்பு கடிதம் எழுதிச்சென்ற திருடனின் செயல் பலரையும் ஆச்சரியப்பட செய்துள்ளது.
காரைத் திருடி விட்டு பிறகு மனம் கேட்காமல் அந்த காரிலேயே மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து ரோட்டிலேயே விட்டுச் சென்ற சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. டெல்லியில் பாலாம் காலணியை சேர்ந்த வினய் குமார் என்பவரின் ஸ்கார்பியோ கார் சமீபத்தில் திருடு போனது. இது தொடர்பாக 10ஆம் தேதி காரின் உரிமையாளர் வினய் குமார் புகார் கொடுத்திருந்தார். அதன்படி போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்து காரைதீவிரமாக தேடி வந்தார்கள்.
இந்நிலையில் டெல்லியில் இருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவு ராஜஸ்தானில் உள்ள ஒரு பகுதியில் திருடுபோன கார் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காரின் பின்புற கண்ணாடியில் சில காகிதங்கள் ஒட்டப்பட்டி இருந்தது. அந்த காகிதத்தில் டெல்லியில் பாலாம் காலணியில் இருந்து இந்த கார் திருடப்பட்டது. மன்னிக்கவும் என்ற வாசகத்துடன் அந்த காரின் நம்பர் எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து காரை மீண்டும் உரிமையாளரிடம் சிரமமின்றி ஒப்படைக்க திருடன் எழுதி வைத்த தகவலாகும். மற்றொரு காகிதத்தில் நான் இந்தியாவை நேசிக்கின்றேன் என்று எழுதப்பட்டு மற்றொன்றில் இந்த கார் டெல்லியில் திருடப்பட்டது. உடனே போலீசுக்கு சொல்லுங்கள் அவசரம் என எழுதப்பட்டிருந்தது.
ஜெய்ப்பூர் பிக்கானர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு சாலையோர உணவகத்தின் நிறுத்தப்பட்டிருந்த இந்த காரை பார்த்த பகுதியை சேர்ந்த மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரை சோதனை செய்தார்கள். இந்த கார் வேறு ஏதேனும் குற்றச்செயலுக்கு திருடப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்தார்கள். இந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.