india
3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்..! மக்களே கவனமா இருங்க… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!
கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மகாராஷ்டிரா, கோவா மற்றும் கேரளாவின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.
டெல்லியில் லேசான மழை தொடரும். வரும் நாட்களில் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களில் கடலோரப் பகுதிகளில் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. அதைத்தொடர்ந்து ராக்கெட் பகுதிக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
மும்பையில் தானே, பால்கர், புனே, சதார் மற்றும் மகாராஷ்டிராவின் ஒரு சில இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மல்லபுரம், கண்ணூர் மற்றும் காசர் கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், மீதமுள்ள பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் தானே உள்ள பிவாண்டி பகுதியில் கம்வாரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் கரையோரப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
மேலும் கர்நாடகாவின் தெற்கு உள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் அந்த மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. குடகு மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழையால் மரங்கள், மின்சார கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. டெல்லியில் அடுத்த ஆறு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.