Connect with us

health tips

விட்டமின் பி12 குறைவதால் இவ்ளோ பிரச்சினைகள் இருக்கா?..

Published

on

vitamin b12 deficiency

நமது உடலுக்கு தேவையான பல்வேறு சக்திகளை பல உணவுகளின் மூலமாக நாம் பெறுகிறோம். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளின் வாயிலாக நாம் நமது உடலுக்கு தேவையான விட்டமின்கள், புரதங்கள், நார்சத்துகள் மேலும் பல ஊட்டசத்துகளை பெறுகின்றோம். நமது உடலுக்கு அனைத்து சத்துகளுமே முக்கியம்தான். அதில் ஒன்றுதான் விட்டமின் பி12. விட்டமின் பி12 நமது உடலிம் நரம்பு மண்டலத்திற்கு முகவும் முக்கியமானது. மேலும் நமது உடலுக்கு தேவையான இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யவும் இந்த விட்டமின் தேவைப்படுகிறது. இந்த விட்டமின் நமது உடலில் குறைவதால் நமக்கு பல உடல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம்.

நினைவாற்றல் இழப்பு:

memory loss

memory loss

நமது உடம்பில் விட்டமின் பி12 குறைவதனால் நமக்கு நினைவாற்றல் சம்பந்தமான பிரச்சினைகள் வரக்கூடும். ஏனென்றால் இந்த விட்டமினானது நமது மூளைக்கு செல்லும் நரம்புகளோடு தொடர்பு கொண்டுள்ளது.

கை கால்களில் தசை இணக்கம் இன்மை:

atexia

atexia

அடெக்சியா(Atexia) என்பது நமது கை மற்றும் கால்களில் ஏற்படும் உணர்வு இல்லா தன்மை ஆகும். விட்டமின் பி12 குறைவதனால் நமக்கு இந்த பிரச்சினைகள் வரகூடும்.

வயிற்று புற்றுநோய்:

leads to stomach cancer

leads to stomach cancer

ஆபத்தான இரத்தசோகையினால் நமது உடலில் உள்ளா விட்டமின் பி12  குறைவதனால் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் குடல் புற்று நோய் ஏற்படுகிறது.

கண் சம்பந்தமான பிரச்சினைகள்:

leads to eye problem

leads to eye problem

நமது உடலுக்கு தேவையான முக்கியமான விட்டமின்கள் குறைவதனால் நமது நரம்பு மண்டலம் பாதிப்படைகிறது. முக்கியமாக கண் சம்பந்தப்பட்ட நரம்புகளும் பாதிக்கப்படுகிறது. எனவே விட்டமின் பி12 குறைவதனால் நமது கண் பார்வை குறையும் அபாயம் உள்ளது.

பிறவி குறைபாடு:

leads to birth deficiency

leads to birth deficiency

விட்டமின் பி12 குறைபாடினால் நமக்கு பிறவி சம்பந்தமான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. இந்த விட்டமினை மிக கவனத்துடன் எடுத்து கொள்வதால் நாம் இவ்வாறான குறைபாட்டினை தடுக்கலாம்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *