latest news
உள்ளாட்சித் தேர்தல் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை உயர்வு… எவ்வளவு தெரியுமா?
உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது மரணம் அல்லது காயமடையும் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை குறைவாக இருப்பதாகவும் அதை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்தநிலையில், உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது மரணம் அல்லது காயமடையும் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை தமிழ்நாடு அரசு உயர்த்தியிருக்கிறது.
இழப்பீட்டுத் தொகை எவ்வளவு?
சமூக விரோதத் தாக்குதல் அல்லது ஆயுதத் தாக்குதல் உள்ளிட்ட வன்முறைகள் மூலம் உயிரிழந்தால், ஏற்கனவே உள்ள இழப்பீட்டுத் தொகையான ரூ.10 லட்ச ரூபாயிலிருந்து அது ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், வேறு காரணங்களால் மரணமடைந்தால் இழப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்கிறது.
உடல் உறுப்புகளில் நிரந்தர பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீட்டுத் தொகை ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.7.5 லட்சமாகவும் சிறு காயங்களுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.10,000-த்திலிருந்து ரூ.40,000 ஆகவும் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.