Finance
தலை சுற்ற வைத்த தங்க விலை…இப்படியா கூடுறது ஒரே நாள்ல?…
கடந்த சில நாட்களாக சென்னயில் விற்கப்பட்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் காணப்படாத நிலையில் இன்று விற்பனை விலை அதிரடியாக உயர்ந்து, நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெள்ளியின் விலையிலும் உயர்வு காணப்பட்டது.
செப்டம்பர் மாதம் துவங்கியதிலிருந்தே தங்கத்தின் விற்பனை விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் தென்படாமல் இருந்தது. இம்மாதம் இரண்டாம் தேதி முதல் நான்காம் தேதி வரை தங்கம் சவரன் ஒன்றிற்கு ஐம்பத்தி மூவாயிரத்து முன்னூற்றி அறுபது ரூபாய்க்கு (ரூ.53,360/-) விற்கப்பட்டது. விலையில் பெரிய அளவிலான மாற்றம் இல்லாதது ஆபரணப்பிரியர்களை அமைதிப்படுத்தி வந்தது.
இந்நிலையில் செப்டம்பர் ஆறாம் தேதியான இன்று, ஓரே நாளில் சவரனுக்கு நானூறு ரூபாய் (ரூ.400/-)உயர்ந்துள்ளது.
இதனால் சென்னையில் ஒரு சவரன் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஐம்பத்தி மூவாயிரத்து எழுனூற்றி அறுபது ரூபாய்க்கு (ரூ.53,760/-) விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ஐம்பது ரூபாய் உயர்ந்து ஆறாயிரத்து எழனூற்றி இருபது ரூபாயக்கு விற்கப்படுகிறது.
எப்படி தங்கத்தின் விலை ஒரே நாளில் கிராமிற்கு ஐம்பது ரூபாயும் (ரூ.50/-), சவரனுக்கு நானூறு ரூபாயும் (ரூ.400/-) அதிகரித்து நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதோ, அதே போலத்தான் வெள்ளியின் விலையிலும் உயர்வு கண்டு அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.
இன்று ஒரு கிராம் வெள்ளி இரண்டு ரூபாய் உயர்ந்து தொன்னூற்றி இரண்டு ரூபாய்க்கு (ரூ.92/-) விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி தொன்னூற்றி இரண்டாயிரம் ரூபாய்க்கு (ரூ.92,000/-)விற்பனை செய்யப்பட்டு வருகிறது.