Connect with us

Cricket

300+ ரன்கள் முன்னிலையில் நியூசிலாந்து… வெற்றி பெறுமா இந்தியா..? இதோ ரிப்போர்ட்..!

Published

on

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெறும் 156 ரன்களுக்கு சுருண்டது.

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது புனேவில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியில் குல்தீப் யாதவ், முகமது சிராஜ், கே.எல்.ராகுல் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், ஷுப்மன் கில், ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டார்கள். மேலும் ஸ்பிச் ஸ்பின்னர்களுக்குதான் நல்ல ஒத்துழைப்பை கெடுக்கும் என்று கணிக்கப்பட்டது. அதே போல் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை இந்திய வீரர்களின் பந்துகள் தடுமாற செய்தது.

இருப்பினும் டிவோன் கான்வே 76 (141), ராசின் ரவீந்திரா 65 (105), மிட்செல் சாண்ட்னர் 33 (51) மூன்று வீரர்களும் நல்ல ஸ்கோர் கொடுத்தார்கள். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259/10 ரன்கள் எடுத்திருந்தது. இதில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும் ரவீந்திர அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தார். இதையடுத்து விளையாடிய இந்திய அணி 156/10 ரன்கள் எடுத்து 103 ரன்கள் பின்தங்கி இருந்தது.

இன்று இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி இரண்டாவது நாள் முடிவில் 198/5 ரன்களை எடுத்து, 301 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புனேவில் பிட்சில் சுழல் அதிகமாக இருக்கின்றது. இதை தொடர்ந்து நான்காவது மற்றும் ஐந்தாவது நாளில் சுழல் அதிகமாக இருக்கும் என்பதால் நியூசிலாந்து அணியானது இன்னும் ஒரு 50 ரன்கள் அடித்தாலே வெற்றியை உறுதி செய்து விடும் என்று கூறப்படுகின்றது. இதில் இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு கிடைக்குமா? என்று பலரும் சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்.

google news