Connect with us

Cricket

விராட் கோலி இப்படி ஆடக்கூடியவரே கிடையாது… என்னதான் நடக்குது…? ரவி சாஸ்திரி கேள்வி..!

Published

on

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது புனேவில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியில் குல்தீப் யாதவ், முகமது சிராஜ், கே.எல்.ராகுல் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், ஷுப்மன் கில், ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டார்கள். மேலும் ஸ்பிச் ஸ்பின்னர்களுக்குதான் நல்ல ஒத்துழைப்பை கெடுக்கும் என்று கணிக்கப்பட்டது. அதே போல் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை இந்திய வீரர்களின் பந்துகள் தடுமாற செய்தது.

இருப்பினும் டிவோன் கான்வே 76 (141), ராசின் ரவீந்திரா 65 (105), மிட்செல் சாண்ட்னர் 33 (51) மூன்று வீரர்களும் நல்ல ஸ்கோர் கொடுத்தார்கள். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259/10 ரன்கள் எடுத்திருந்தது. இதில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும் ரவீந்திர அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தார். இதையடுத்து விளையாடிய இந்திய அணி 156/10 ரன்கள் எடுத்து 103 ரன்கள் பின்தங்கி இருந்தது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 156 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டம் இழந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளங்கும் விராட் கோலி வெறும் 1 ரன்களில் ஆட்டம் இழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விராட் கோலி அவுட்டான விதம் பலரையும் விமர்சிக்க வைத்துள்ளது. முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களை குழப்பம் அடைய செய்திருக்கின்றது. இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரரும் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கூறுகையில் விராட் கோலி எப்போதும் இது மாதிரி விளையாட மாட்டார் என்று கூறியிருக்கின்றார்.

இன்று 2-வது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி இரண்டாவது நாள் முடிவில் 198/5 ரன்களை எடுத்து, 301 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புனேவில் பிட்சில் சுழல் அதிகமாக இருக்கின்றது. இதை தொடர்ந்து 4வது மற்றும் 5வது நாளில் சுழல் அதிகமாக இருக்கும் என்பதால் நியூசிலாந்து அணியானது இன்னும் ஒரு 50 ரன்கள் அடித்தாலே வெற்றியை உறுதி செய்து விடும் என்று கூறப்படுகின்றது.

google news