Cricket
இந்திய அணிக்கு உலக கோப்பைகள் கொடுத்த முக்கிய கேட்சுகள்… கபில்தேவ் முதல் சூர்யகுமார் வரை…
ஐசிசி உலக கோப்பையை இந்திய அணி 17 வருடம் கழித்து பெற்று இருக்கிறது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது. தோனி தலைமையிலான வெற்றிக்கு பின்னர் ரோஹித் இந்தியாவிற்கு உலக கோப்பையை பெற்று கொடுத்து இருக்கிறார்.
இவ்விரண்டு கோப்பைகளுக்கு முன்னர் இந்தியா கபில்தேவ் தலைமையிலான அணி இருந்த போது உலக கோப்பையை பெற்றது. மூன்று உலக கோப்பைகளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? கிட்டத்தட்ட இந்திய அணி தலை தூக்கி கொண்டு இருந்த காலகட்டம் அது. கவாஸ்கரை இறக்கிவிட்டு கபில்தேவ் கேப்டனாக நியமிக்கப்படுகிறார்.
ரொம்பவே ஏளனமாக பார்க்கப்பட்ட இந்திய அணி இங்கிலாந்து சென்றது. இந்த முறையும் ஒன்னுமே இல்லாமல் தான் வருவார்கள் என கிசுகிசுத்தனர். ஆனால் அவர்கள் நம்பிக்கையை பொய்யாக்கி ஒவ்வொரு ஜாம்பவான் அணியை தட்டி தூக்கி இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. அந்த காலக்கட்டத்தில் இரண்டு கோப்பைகளை வைத்து இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதியது. முதலில் ஆடிய இந்திய அணி 183 இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணயித்தனர்.
அடுத்து இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்த ஆட்டமிழந்தாலும் விவியன் ரிச்சர்ட் களத்தில் இருந்தார். மதன்லால் வீசிய அந்த பந்தை ரிச்சர்ட் தூக்கி அடிக்க அதை பின்னாலே ஓடிச்சென்ற கபில்தேவ் லாவகமாக பிடித்தார். அந்த கேட்ச் போட்டியை மாற்றியது. இந்தியாவிற்கு முதல் உலக கோப்பை கிடைக்க காரணமானது.
ஆனால் அந்த உலக கோப்பைக்கு பின்னர் இந்தியாவிற்கு பெரிய கோப்பை எதுவும் கிடைக்கவே இல்லை. பல ஜாம்பவான்கள் இருந்தாலும் உலக கோப்பையை ருசிக்க முடியாமல் போனது. 2007ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையில் விளையாடியது.
ஒவ்வொரு போட்டியிலும் சரியான கணிப்பில் இறங்கி பைனல் வரை சென்றது. இறுதியில் பாகிஸ்தானை சந்தித்தது. ஐந்து விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்கள் இந்தியா பெற்றது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இழக்குடன் பாகிஸ்தான் இறங்கியது.
18 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் சேர்த்து ஒன்பது விக்கெட்களை பாகிஸ்தான் அணி இழந்து இருந்தது. கடைசி ஓவருக்கு ஜோகிந்தர் சர்மா கையில் பந்தை கொடுத்து தோனி வீச சொல்ல இது பலருக்கு ஆச்சரியத்தினை கொடுத்தது. ஆனால் அதற்கேற்ப அவர் வீசிய மூன்றாவது பந்தை மிஸ்பா அடிக்க ஸ்ரீசாந்த் கையில் லாவகமாக அமர்ந்தது.
2024 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்க அணி வெல்ல 30 பாலுக்கு 30 ரன்கள் மட்டுமே தேவை இருந்த நிலையில் ஹர்திக் வீசிய பந்தை டேவிட் மில்லர் அடிக்க சிக்ஸ் கோட்டுக்குள் விழுந்த பந்தை சூர்யகுமார் யாதவ் பிடித்து வெளியில் எறிந்துவிட்டு பிடித்த கேட்ச் ஆட்டத்தினையே மாற்றி இந்தியாவுக்கு கப்பை பெற்று தந்தது.