Cricket
டெஸ்ட் கிரிக்கெட்…இலக்கு எளியது….கோப்பை இந்தியாவுக்கு?…
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரினல் விளையாட இந்தியாவிற்கு வந்துள்ள வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வைத்து நடந்த இந்தப் போட்டியில் அசாத்திய திறமையை வெளிப்படுத்திய இந்திய அணி அசத்தலான வெற்றியை பெற்றது. இந்திய அணியின் ஆல்-ரவுண்டர்களான அஷ்வின் – ஜடேஜா இணை பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஜொலிக்க, வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா. இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று பங்களாதேஷை பேட்டிங் செய்ய வைத்தது இந்தியா, மழை குறுக்கீட்டின் காரணமாக போட்டி தடை பெற்று வந்த நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முழுவதுமாக நடந்து முடிந்தது.
போட்டியை வென்றாக வேண்டும் என்ற முனைப்போடு இந்திய வீரர்கள் இருபது ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதைப் போல பேட்டிங்கில் அதிரடி காட்டினர். இந்திய அணி முன்னிலை பெற்று டிக்ளர் செய்ய தனது இரண்டாவது இன்னிங்ஸை தடுமாற்றத்துடன் தொடர்ந்தது வங்காளதேசம்.
ஐந்தாம் நாளான இன்று நூற்றி நாற்பத்தி ஆறு ரன்களை எடுத்து பத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேசம். தொன்னூற்றி ஐந்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது இந்தியா.
நாலு ஓவர்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இருபத்தி ஒன்பது ரன்களை எடுத்து ரோஹித் சர்மாவின் விக்கெட்டினை பறிகொடுத்து விளையாடி வருகிறது இந்தியா. இந்த போட்டியில் வென்றாலும், டிராவில் முடிவடைந்தாலும் இந்திய அணி கோப்பையை தன் வசப்படுத்திக்கொள்ளும்.