Cricket
சாம்பியன்ஸ் டிராபி… பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… இந்திய அணி திட்டவட்டம்!…
இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் 2012ம் ஆண்டுக்கு பின்னர் இருதரப்பு போட்டிகளில் விளையாடவில்லை. அதற்கு முன்னதாகவே 2008ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடுவதை இந்தியா நிறுத்திவிட்டது. இதனை தொடர்ந்து கடந்தாண்டு நடந்த ஆசிய கோப்பையில் விளையாட பாகிஸ்தான் வர முடியாது என இந்தியா மறுத்துவிட்டது.
இதனை தொடர்ந்து இந்தியா விளையாட இருந்த போட்டிகள் இலங்கையில் மாற்றி வைக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் சாம்பியன் டிராபி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோத இருக்கும் போட்டிகள் லாகூரில் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் வர முடியாது என பிசிசிஐ நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது. ஆசிய கோப்பையை போல சாம்பியன் டிராபி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்த கோரிக்கை வைக்கப்பட இருக்கிறது.
சாம்பியன் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்திருக்கும் நிலையில் இந்த மாதம் கொழம்புவில் நடத்தப்பட இருக்கும் ஐசிசி கூட்டத்தில் இது குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. 2017 ஆம் ஆண்டு இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் டிராபியின் நடப்பு சாம்பியனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.