Cricket
முன்னாள் கிரிக்கெட் வீரர் அஞ்சுமன் கெய்க்வாட் காலமானார்… அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்
1983ம் ஆண்டு இந்திய உலகக்கோப்பை அணியில் இடம்பெற்று இருந்த அஞ்சுமன் கெய்க்வாட் புற்றுநோயால் காலமாகி இருக்கிறார். இது உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய அணிக்காக சுமார் 22 ஆண்டுகளில் 205 போட்டிகளில் அஞ்சுமன் விளையாடி இருக்கிறார். இதில் 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 15 ஒருநாள் போட்டிகள் அடக்கம். இந்திய அணியின் பயிற்சியாளராகவும், பிசிசிஐயின் தேர்வுக்குழு உறுப்பினராகவும் இருந்து இருக்கிறார்.
அஞ்சுமன் தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் அதிகபட்சமாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 11 மணிநேரமாக களத்தில் நின்று 201 ரன்கள் குவித்தார். பெரிய சாதனைகளை வைத்திருந்த அஞ்சுமன் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இவரின் சிகிச்சைக்காக பிசிசிஐ ஒரு கோடி ரூபாய் நிதியுதவி கொடுத்திருந்தது.
லண்டன் கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அஞ்சுமன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இவரின் இறப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கலை தெரிவித்துள்ளார். உலக ரசிகர்களும் அஞ்சுமனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.