Categories: indialatest news

வயசோ கம்மி…ஆனா மனசோ பெருசு…உருக வைத்த மாணவனின் கடிதம்…

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி முன்னூற்றிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் முண்டக்காய், மெப்பாடி, சூரல் மலை பகுதிகளில் மீட்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மீட்பு பணியில் பெண் மேஜர் ஒருவர் உட்பட ஆண் வீரர்கள் பலரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மீட்பு பணிகள் மேற்கொள்வதில் அதிக சிரமம் இருந்து வந்த போதும் இந்திய ராணுவ வீரர்கள் ஆற்றலுடன் செயல் பட்டு வயநாட்டில் இயல்பு நிலை திரும்பி வர தீவிரமாக போராடி வருகின்றனர். இந்நிலையில் ராணுவ வீரர்கள் செயலைப் பார்த்து தன்னையும் மீட்புக்குழுவில் இணைத்துக் கொள்ள ராணுவத்திற்கு மூன்றாம் வகுப்பு மாணவன் விடுத்துள்ள கோரிக்கை கடிதம் பற்றிய செய்தி வைரலாகி வருகிறது.

தனது கடிதத்தில் ராணுவ வீரர்கள் பிஸ்கட்களை மட்டுமே சாப்பிடுவதை வீடியோவில் பார்த்ததாகவும். அதனை மட்டுமே சாப்பிட்டு விட்டு சவாலான பணிகளை செய்து வருகிறார்கள்,  மீட்புப் பணியில் ஈடுபடுவதை பார்த்து தான் மகிழ்ச்சி அடைந்ததாகவும், அதனால் ராணுவத்திற்கு மகிழ்ச்சியுடன் சல்யூட் அடித்துக் கொள்வதோடு, தான் ராணுவத்தில் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Letter

மூன்றாம் வகுப்பு மாணவன் ரயானின் இந்தக் கோரிக்கை கடிதத்திற்கு இந்திய ராணுவம் தனது பதிலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

சிறுவன் ரயானின் இதயப்பூர்வமான வார்த்தைகள் எங்களை ஆழமாக தொட்டன. இக்கட்டான காலங்களில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு உள்ளோம். நீங்கள் அனுப்பிய கடிதம் இந்தப் பணியை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

உங்களைப் போன்ற ஜாம்பவான்கள் ராணுவத்தில் இணைவது பெருமையே. நீங்கள் ராணுவ சீருடை அணிந்து எங்களின் பக்கத்தில் நிற்கும் நாளை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நாம் ஒன்று பட்டு தேசத்தை பெருமை படுத்துவோம் என தனது பதிலை  சொல்லியிருக்கிறது இந்திய ராணுவம்.

sankar sundar

Recent Posts

ரூ. 500-க்கு கிடைக்கும் கியாஸ் சிலிண்டர் பற்றி தெரியுமா?

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…

17 mins ago

இந்திய புழக்கத்தில் ரூ. 10,000 நோட்டு.. இந்த விஷயம் தெரியுமா?

இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…

32 mins ago

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

3 hours ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

4 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

4 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

5 hours ago