Cricket
இக்கட்டான நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி…அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல்?…
மகளிர் கிரிக்கெட் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி பலமிக்க ஆஸ்திரேலியாவை எதிர் கொண்டு வருகிறது. இந்த தொடரின் துவக்கத்தில் இந்திய அணி தடுமாறியதால் முதல் சுற்றிலிருந்து அடுத்த சுற்றுற்கு செல்வதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது.
மொத்தம் பத்து அணிகள் இந்த இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இரண்டு குரூப்புகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் – ஏவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. இதே குரூப்பில் பலமிக்க
ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தும் பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம் பெற்றுள்ளன.
மற்றொரு குரூப்பில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ், ஸ்காட்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.
குரூப் – ஏவில் இடம் பிடித்துள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இது வரை மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளது.
இதில் இரண்டு போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. இந்திய அணியைப் போலவே நியூஸிலாந்து அணியும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தில் உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் இன்று இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி தற்போது நடந்து
வருகிறது. டாஸில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்திய அணியின் பந்து வீச்சாளர் ரேணுகா தாகூர் சிங் நான்கு ஓவர்கள் வீசி இரண்டு விக்கெட்டுகளை
எடுத்துள்ளார்.
தீப்தி ஷர்மா, ராதா யாதவ், பூஜா வஸ்த்ராகார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். ஆஸ்திரேலிய அணி தொடக்க பேட்ஸ்மேன் கிரேஸ் ஹாரீஸ் நாற்பது ரன்களை குவித்தார். அந்த அணியின்
மற்றுமொரு நட்சத்திர வீரரான தகிலா மெக்ராத் முப்பத்தி இரண்டு ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
பதினைந்து ஓவர்கள் நிறைவடைந்திருந்த நேரத்தில் ஆஸ்திரேலிய அணி நூற்றி ஓரு ரன்களுக்கு ஐந்து
விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே
அரை இறுதிக்குள் நுழையப் போவதுன் யார் என கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இரண்டுமே இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில்
இருப்பதால் தற்போது நடை பெற்று வரும் போட்டி அதிகபேரின் கவனத்தை ஈர்த்துள்ளது.