Connect with us

Cricket

இங்க நாங்க தான் குயின்!…கெத்து காட்டிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி…

Published

on

Indian Team

நியூஸிலாந்து ஆடவர் அணியைப் போலவே அந்நாட்டு மகளிர் கிரிக்கெட் அணியும் இந்தியாவில் தனது சுற்றுப்பயணத்தை துவங்கியுள்ளது. மூன்று ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாட வந்துள்ள அந்த அணி அஹமதாபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது.

ஐக்கிய அரபு எமீரகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற கையோடு நியூஸிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வந்துள்ளது.

மூன்று ஒரு நாள் சர்வதேச போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வந்துள்ள நியூஸிலாந்து பெண்கள் அணி, நேற்று குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 44.3 ஓவர்களில் 227 ரன்களை எடுத்து ஆல்-அவுட் ஆனது.

இந்திய அணியின் தேஜல் 64 பந்துகளில் 42 ரன்களும், ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா51 பந்துகளில். 41 ரன்களையும் எடுத்திருந்தனர். ஷிபாலி வர்மா 22 பந்துகளில் 33 ரன்களை எடுத்தார்.

India Win

India Win

228 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு பேட்டிங் செய்ய வந்த நியூஸிலாந்து 40 ஓவர்களில் 168 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

நியூஸிலாந்தின் அமேலா கேர் 23 பந்துகளில்  25 ரன் களை குவித்து அவுட் ஆகாமல் இருந்தார்.ப்ரூக் ஹேல்லிடே 54 பந்துகளில் 39 ரன்களையும் எடுத்திருந்தனர். இந்திய அணியின் பவுலர்கள் ராதா யாதவ் 8.4 ஓவர்களில் 35 ரன் களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், சைமா தாக்கூர் 7 ஓவர்கள் வீசி 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இந்திய பெண்கள் ஒரு புறம் நியூஸிலாந்தை வீழ்த்தி கெத்து காண்பிக்க, அதே நியூஸிலாந்து ஆடவர் அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் இந்திய ஆடவர் அணி தடுமாறி வருகிறது. இந்த இரு நாட்டு பெண்கள் அணியினருக்கு இடையேயான அடுத்த இரண்டு போட்டிகளும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வைத்தே நடைபெற் உள்ளது.

google news