Connect with us

Cricket

கான்பூர் சம்பவம்.. பின்னணியில் கம்பீர்-ரோகித் பிளான்.. டிரெசிங் ரூம் சீக்ரெட் சொன்ன பந்துவீச்சு பயிற்சியாளர்

Published

on

மழை காரணமாக இரண்டு நாள் ஆட்டம் தடைப்பட்ட நிலையில், வங்கதேசம் அணி நான்காம் நாள் ஆட்டத்தை எப்படி கொண்டு செல்வது என நிச்சயம் திட்டம் தீட்டியிருக்கும். எனினும், அவை அனைத்தையும் ஓவர்டேக் செய்யும் அளவுக்கு இந்திய அணி தனது செயல்பாடுகளில் தீவிரம் காட்டியது. துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது, வங்கதேசம் அணியின் விக்கெட்டுகளை விரைந்து வீழ்த்தியது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ஸ்கோர் போர்டை எகிற செய்த சம்பவம் பலருக்கும் நீண்டகாலம் நினைவில் நிற்கும். இந்த நிலையில், நான்காம் நாள் ஆட்டம் துவங்கும் முன் இந்திய டிரெசிங் ரூமில் என்ன நடந்தது, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் தொடங்கும் முன் எடுக்கப்பட்ட முடிவு என்ன? என்ற கேள்விகளுக்கு இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதில் அளித்துள்ளார்.

“கவுதம் கம்பீரின் மனநிலை கூட, போட்டியில் ஆதிக்கம் செலுத்தி, முடிந்த வரை முன்னணியில் இருக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. இதனை சாத்தியப்படுத்த ஒரு தலைவர் முன்னணியில் இருந்து செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும். அந்த வகையில், ரோகித் சர்மா இதனை பலமுறை செய்து காட்டிய நிலையில், மீண்டும் அதை நிரூபித்துள்ளார். பந்து பவுன்ஸ் ஆகலாம், மெல்ல கீழேயும் வரலாம் என்ற பிட்ச்-இல் தான் எதிர்கொண்ட முதல் பந்தில் இருந்தே சிக்ஸ் அடித்தது.”

“பந்துவீச்சில் சற்று பின்னடைவு ஏற்படலாம். ஆனால், கேப்டன் முன்னணியில் இருந்து செயல்படுவது, அணியை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வதை பார்க்க சிறப்பாக இருக்கிறது. என்னைப் பொருத்தவரை இது மிகவும் அருமையாகவும், ரசிக்கும் படியாகவும் இருந்தது. ஒவ்வொருத்தரும் தங்களது பணியில் மிகவும் ஈடுபாடு கொண்டுள்ளனர், அதனை களத்திலும் பிரதிபலிக்க செய்கின்றனர். மீண்டுவருவதை பார்க்கும் போது அவர்கள் அங்கு சரியாகவே உள்ளனர்,” என்று மோர்னே மோர்கல் தெரிவித்தார்.

google news