Connect with us

Cricket

விக்கெட் இருந்தும் டிக்ளேர் செய்த ரோகித்.. பின்னணியில் பக்கா ஸ்கெட்ச்.. பயங்கரமா இருக்கே..!

Published

on

இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அதன் நான்காம் நாளில் பற்றி எரிந்தது. நான்காம் நாளின் முதல் செஷனில் இருந்தே வேலையை காட்டத் துவங்கிய இந்திய அணி, படிப்படியாக அதிரடி அவதாரம் எடுத்து ஆடியது. இந்தப் போட்டின் இரண்டு நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது ரசிகர்களை ஏமாற்றம் கொள்ள செய்தது.

இரண்டு நாள் ஏமாற்றத்திற்கு தீனிப்போடும் வகையில், நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விஸ்வரூப மோடிற்கு மாறியது. வங்கதேசம் அணியை 233 ரன்களில் ஆல் அவுட் ஆக்கிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் துவக்கத்திலேயே டாப் கியருக்கு மாறியது. ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்த, டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் மூன்று ஓவர்களில் 50 ரன்களை கடந்தது.

இருந்தும், விடாமல் அடித்து ஆடிய இந்திய அணி 10.1 ஓவரில் 100 ரன்களையும், 18.2 ஓவர்களில் 150 ரன்களையும் கடந்தது. இடையில் சில விக்கெட்டுகள் சரிந்த நிலையில், அடுத்தடுத்து வந்த வீரர்கள் ஃபயர் மோடில் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால், இந்திய அணி 24.4 ஓவர்களில் 200 ரன்களை கடந்தது. பிறகு 30.4 ஓவர்களில் இந்திய அணி 250 ரன்களை கடந்தது.

இவ்வாறு டெஸ்ட் போட்டியில் அதிவேக 50 ரன்கள், 100 ரன்கள், 150 ரன்கள், 200 ரன்கள் மற்றும் 250 ரன்களை அடித்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. 34.4 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்களை குவித்த போது, முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. 21-ம் நூற்றாண்டில் 25 ஓவர்களுக்குள் டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸில் டிக்ளேர் செய்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.

கைவசம் விக்கெட் இருந்த போதிலும், இந்திய கேப்டன் இன்னிங்ஸை டிக்ளேர் செய்ய சூப்பர் காரணம் இருந்தது. கைவிசம் விக்கெட் இருக்கும் போது, கூடுதல் ரன்களை அடிப்பதை பலரும் திட்டமிடுவர். எனினும், நான்காம் நாள் ஆட்டத்தில் கிட்டத்தட்ட 20 ஓவர்கள் வரை பந்துவீச நேரம் இருக்கும் போது, இந்திய கேப்டன் ரோகித் சர்மா டிக்ளேர் செய்தார்.

இவ்வாறு செய்ததும், பந்துவீச களமிறங்கிய இந்திய வீரர்கள் விக்கெட் கைப்பற்றுவதில் தீவிரம் காட்டினர். மேலும், நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் அணி 26 ரன்களை மட்டுமே அடித்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதோடு, ஐந்தாம் நாள் ஆட்டத்தை துவங்கும் போது அந்த அணி 26 ரன்கள் பின்தங்கியிருக்கும்.

ஐந்தாம் நாள் ஆட்டத்திலும், வங்கதேசம் அணியை குறைந்த ரன்களில் ஆட்டமிழக்க செய்து, எஞ்சியுள்ள ரன்களை அடித்து போட்டியில் வெற்றி பெறுவதை ரோகித் சர்மா திட்டமாக வைத்திருக்கிறார். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அட்டவணையில் இந்திய அணி தொடர்ந்து முன்னணி இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

google news