Connect with us

govt update news

நீட் தேர்வு இலவச பயிற்சி…சரியா பயன்படுத்துங்க…சக்சஸ் ஆகுங்க!…

Published

on

sathee

மாணவர்கள் கூட்டு நுழைவுத் தேர்வு ஜே.இ.இ. மற்றும் நீட் தகுதித் தேர்வுகளுக்கு  தங்களை தயார் படுத்திக் கொள்ளும் விதமான சுயமதிப்பீட்டு கருவியான ‘சதீ போர்ட்டல் 2024’ஐ அறிமுகப்படுத்தியுள்ளது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்.

இந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகள் வேறு மொழிகளில் பயிற்சியை இந்த ‘சதீ போர்ட்டல்’ வழங்குகிற்து. சதீ ஆன்லைன் தளமானது மாணவர்களுக்கு இலவச கற்றல் பொருட்கள், வீடியோ விரிவுரைகள், மாதிரித் தேர்வுகள் மற்றும் நிபுணர் பயிற்சி உள்ளிட்ட ஏராளமான சேவைகள் வழங்கப்படுகிறது.

சதீ போர்ட்டல் 2024க்கு பதிவு செய்வது எப்படி? எனத் தெரிந்து கொள்ளலாம்…

அதிகாரப்பூர்வ NCERT இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள சதீ போர்ட்டல் இணைப்பை கிளிக் செய்த பின்னர் சுயவிவரங்களை பதிவிடல் வேண்டும்.

பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் முந்தைய கல்விப் பதிவுகளை வழங்குவதன் மூலம் கணக்கை உருவாக்கவும்.JEE, NEET அல்லது SSC போன்ற நீங்கள் தயாராகும் போட்டித் தேர்வைத் தேர்வு செய்யவும்.

Entrance Exam

Entrance Exam

பதிவு செய்தவுடன், நேரலை அமர்வுகள், சுய மதிப்பீட்டு கருவிகள் மற்றும் வீடியோ விரிவுரைகளுக்கான அணுகலைப் பெறுவீர்கள். ஐ.ஐ.டி.,கள், என்.ஐ.டி.,கள் மற்றும் எய்ம்ஸ் போன்ற மதிப்புமிக்க நிறுவனங்களின் பாட நிபுணர்கள் மற்றும் வழிகாட்டிகள் மாணவர்களுக்கு ஆதரவை வழங்குகிறார்கள்.

இந்த தளத்தின் ஜே.இ.இ. மற்றும் பிற பொறியியல், நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் புதிய க்ராஷ் படிப்பும் தொடங்கப்பட்டுள்ளது.

கல்வி வழிகாட்டிகள் மற்றும் மூத்த மாணவர்கள் நேரடி அமர்வுகளின் போது உதவி மற்றும் வழிகாட்டுதலை வழங்குகிறார்கள் மற்றும் தனிப்பட்ட ஆதரவை உறுதி செய்கிறார்கள்.

கூடுதல் தகவல்களுக்கு:https://sathee.prutor.ai/ இணையதள முகவரியின்  மூலம் தெரிந்து கொள்ளலாம்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *