latest news
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட உளவுத்துறை துணை ஆய்வாளர்… சிக்கியது 5 பக்க கடிதம்…
வேலை அழுத்தம், குடும்ப பிரச்னையால் காவலர்கள் தற்கொலை செய்து கொள்வது வழக்கமாக ஆகிவிட்ட நிலையில் துணை ஆய்வாளரின் தற்கொலைக்கான காரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
சென்னையை சேர்ந்த பட்டினப்பாக்கம் பிஆர்ஓ காவலர் குடியிருப்பில் மூன்றாவது தளத்தில் மனைவி ஜென்ஸியுடன் வசித்து வருகிறார் மோ.ஜான் ஆல்பர்ட். இத்தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. ஜான் ஆல்பர்ட் டிஜிபி அலுவலகத்தில் உளவுத்துறையில் துணை ஆய்வாளராக வேலை செய்து வருகிறார்.
திங்கள்கிழமை காலை தன்னுடைய சீருடையை அயர்ன் செய்வதாக கூறி அறைக்கு சென்று இருக்கிறார். அறையை உள்தாழ்ப்பாள் போட்டு இருந்த ஜான் ஆல்பர்ட் வெகு நேரமாக வெளியில் வரவில்லை. ஜென்ஸி கதவை தட்டியும் அவரிடம் இருந்து பதிலில்லை. இதனால் பயந்து போன ஜென்ஸி அண்டை வீட்டாரை அழைத்து இருக்கிறார்.
அவர்கள் உதவியுடன் ரூம் கதவை உடைத்து பார்க்க தூக்கு போட்டு ஜான் ஆல்பர்ட் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். இதனை பார்த்து மனைவி ஜென்ஸி அதிர்ச்சியாகி விட்டார். உடனே ஜென்ஸி மற்றும் நண்பர்கள் இணைந்து ஜான் ஆல்பர்ட்டை மருத்துவமனை அழைத்து செல்ல பார்க்க அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, பட்டினப்பாக்கம் போலீஸார் விரைந்து வந்து ஆல்பர்ட் சடலத்தினை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். இதையடுத்து வழக்கு தொடரப்பட்டு ஆல்பர்ட் தற்கொலை எதற்காக செய்து கொண்டார் என விசாரித்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக அளவில் பணமிழந்ததால் தற்கொலை என குறிப்பிட்டப்பட்ட ஐந்து பக்க கடிதம் சிக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: மீண்டும் வருகிறது மினிபஸ் சேவை… தமிழ்நாடு அரசின் சூப்பர் பிளான்!