Connect with us

Cricket

இறங்கி அடிச்சா 50 Confirm.. வேற லெவல் சாதனை படைத்த இஷான் கிஷன்..!

Published

on

Ishan-Kishan-Featured-Img

வெஸ்ட் இன்டீஸ் சுற்றுப் பயணத்தில் இஷான் கிஷன் மற்றும் ஓர் அரைசதத்தை மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விளாசினார். இஷான் கிஷன் 64 பந்துகளில் 77 ரன்களை குவித்த நிலையில், இந்திய அணி ஸ்கோர் கிடுகிடுவென அதிகரித்தது. இந்த அரைசதம் காரணமாக ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியிலில் இஷான் கிஷன் இடம்பிடித்து உள்ளார்.

ஒரு தொடரின் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியில் ஸ்ரீகாந்த், திலீப் வெங்சர்கார், முகமது அசாருதீன், எம்.எஸ். டோனி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது இஷான் கிஷன் இவர்களுடன் இணைந்து இருக்கிறார். இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் இடையே நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் அரைசதம் அடித்தார்.

Ishan-Kishan

Ishan-Kishan

முன்னதாக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இன்டீஸ் அணி இந்தியாவை வீழ்த்தியது. முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து, இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் ரோகித் ஷர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

ஹர்திக் பான்டியா தலைமையில் இளம் வீரர்கள் அடங்கிய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கி தோல்வியை தழுவியது. தோல்வி காரணமாக இந்திய அணி நிர்வாகம், மற்றும் வீரர்களுக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வந்தனர். மேலும் அணியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Ishan-Kishan-list

Ishan-Kishan-list

இந்த நிலையில், கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி ஹர்திக் பான்டியா தலைமையிலேயே களமிறங்கியது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. அக்சர் படேல் மற்றும் உம்ரான் மாலிக்-க்கு மாற்றாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜெயதேவ் உனத்கட் களமிறங்கினர். மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இன்டீஸ் அணி பந்துவீச முடிவு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் ஜோடி முறையே 77 மற்றும் 85 ரன்களை விளாசினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 51 ரன்களையும், கேப்டன் ஹர்திக் பான்டியா 70 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 35 ரன்களையும் விளாச இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 351 ரன்களை குவித்தது.

அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இன்டீஸ் அணி 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா சார்பில் ஷர்துல் தாக்கூர் நான்கு விக்கெட்களையும், முகேஷ் குமார் மூன்று விக்கெட்கள், குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்கள் மற்றும் ஜெயதேவ் உனத்கட் ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றி அசத்தியது.

google news