Connect with us

latest news

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை!.. விமான சேவை பாதிப்பு…

Published

on

rain

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளிலும் வெப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து சென்னையின் பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் மழை பெய்ய துவங்கியது.

ஒருகட்டத்தில் பலத்த காற்றுடன் வீசிய துவங்கியது. நுங்கம்பாக்கம், போரூர், கோடம்பாக்கம், ராமாவரம், வளசரவாக்கம் போன்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை கொட்டி தீர்த்தது. அதேபோல், வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம் போன்ற பகுதிகளிலும் இடியுடன் மழை பெய்தது. இதன் காரணமாக பல பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் பெருகெடுத்து ஓடியது.

அதேபோல், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டு 7 விமானங்கள் தரையிரங்க முடியாமல் நீண்ட நேரம் வானத்தில் வட்டமடித்தன. இதில், ஒரு விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மேலும், சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 8 விமானங்கள் தாமதமானதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை மையம் முதல் சொல்லியது. அதன்பின் 5 நாட்களுக்கு கடுமையான வெயில் இருக்கும் என சொல்லியது. இந்த நிலையில்தான் சென்னையில் மழை கொட்டி தீர்த்திருக்கிறது.

google news