latest news
சசிகலாவுக்கு எக்சிட் கொடுத்தாச்சி!.. இனிமே நோ எண்ட்ரி!.. ஜெயக்குமார் அதிரடி..
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அவருக்கு எல்லாமுமாக இருந்தவர் வி.கே.சசிகலா. ஜெ.வின் மறைவுக்கு பின் அதிமுகவை அவர்தான் வழி நடத்த வேண்டும் என அதிமுகவினர் அவரிடம் கோரிக்கை வைத்தனர். அவரும் ஜெ.வை போலவே உடையணிந்து அதிமுக பொதுச்செயலாளராக மாறினார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேர்ந்ததால் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமித்தார்.
ஆனால், அவர் 4 வருடம் சிறையில் இருந்துவிட்டு சென்னை திரும்பிய போது அது கட்சி எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதோடு, சசிகலாவிடம் கட்சி மீண்டும் செல்ல அவர் விரும்பவில்லை. அவர் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி மாறினார். ஆனால், கடந்த சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல் இரண்டிலும் திமுக வென்றது.
எனவே, எடப்பாடி பழனிச்சாமியை விமர்சிக்க துவங்கினார் சசிகலா. அவரை நம்பி முதல்வர் பதவி கொடுத்தேன். ஆனால், கட்சியை பாழ்படுத்தி விட்டார். கட்சியை கைப்பற்றும் நேரம் வந்துவிட்டது. அதிமுகவில் நான் மீண்டும் எண்ட்ரி கொடுப்பேன்’ என ஆவேசமாக பேட்டி கொடுத்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ‘சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எண்ட்ரி கொடுப்பேன் என சொல்கிறேன். அவருக்கு எப்போதோ எக்சிட் கொடுக்கப்பட்டு விட்டது’ என அவர் சொன்னார். மேலும் ‘அண்ணாமலை மாற்றி வேறு ஒருவரை பாஜக தலைவராக போட்டாலும் பாஜகவுடன் கூட்டணி என்பது எப்போதும் இல்லை. பல கட்சிகளுடன் கூட்டணி வைத்தே பாஜகவுக்கு வாக்கு வங்கி 10 சதவீதம் வந்திருக்கிறது. தனித்து நின்றால் ஒன்றும் கிடைக்காது’ என தெரிவித்தார்.