Connect with us

india

பெட்ரோல், டீசல் மட்டுமில்லை!.. குடிநீர் கட்டணமும் உயர்கிறது!.. பொதுமக்கள் அதிர்ச்சி..

Published

on

water

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அவ்வப்போது அதிகரிப்பதுண்டு. பாராளுமன்ற தேர்தல் காரணமாக சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்படவில்லை. ஆனால், இப்போது மக்கள் பயன்படுத்தும் குடிநீரின் விலை அதிகரிக்கவுள்ளது.

பெங்களூரில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 15ம் தேதி மீண்டும் உயர்த்தபப்ட்டது. குடிநீர் கட்டணம் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்டது. கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. சில திட்டங்களால் கர்நாடக அரசு நிதிச்சுமையில் சிக்கி தவிப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது.

இதைத்தொடர்ந்தே பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3 உயர்த்தப்பட்டது. தற்போது மக்கள் பயன்படுத்தும் குடிநீரின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக கர்நாடக அரசு, பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்துடன் ஆலோசனை செய்தது. இதைத்தொடர்ந்து குடிநீர் கட்டணத்தை உயர்த்த கர்நாடக அரசு திட்டமிட்டிருக்கிறது.

இது தொடர்பாக விளக்கமளித்த துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ‘கடந்த 10 வருடங்களாக குடிநீர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால் குடிநீர் வாரியத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. எந்த வங்கியும் குடிநீர் வாரியத்திற்கு நிதியளிக்க முன்வருவதில்லை. எனவே, இழப்பை ஈடுகட்ட மாதாந்திர குடிநீர் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம்’ என கூறினார

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

திடீர் உடல்நலக் குறைவு! – பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி!..

Published

on

advaani

20 வருடங்களுக்கு முன்பு வரை பாஜகவில் முக்கிய தலைவராக இருந்தவர் எல்.கே.அத்வானி. இந்தியாவின் துணை பிரதமராகவும் இவர் இருந்திக்கிறார். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் மூளையாக செயல்பட்டவர் இவர். பாஜக ஆட்சிக்கு வந்தால் அத்வானிதான் பிரதமர் என்கிற நிலை இருந்தது.

ஆனால், குஜராத்தில் தொடர்ந்து 3 முறை முதலைமைச்சராக இருந்த நரேந்திர மோடியை பாஜக பிரதமராக்கியது. நரேந்திர மோடி பிரதமரானதும் அத்வானியின் புகழ் குறைய துவங்கியது. சில அரசியல் மேடைகளில் பிரதமர் மோடியை பார்த்து அத்வானி எழுந்து நின்று கும்பிட, மோடி அதை கண்டு கொள்ளாமல் போன வீடியோக்களும் வெளியானது.

தற்போது வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் இருந்து அத்வானி ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே, எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அத்வானிக்கு இப்போது 96 வயதாகிறது. மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவமனையில் முதியோர் பிரிவு சிறப்பு மருத்துவர்கள் அவரின் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள்.அதேநேரம், அவரின் உடல்நிலை குறித்து எந்த விபரங்களும் மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.

google news
Continue Reading

india

அதிக முறை தோப்புக்கரணம்!.. ராக்கிங் கொடுமையால் மருத்து கல்லூரி மாணவருக்கு சிறுநீரகம் பாதிப்பு!..

Published

on

ragging

ராக்கிங் என்பது பல வருடங்களாக கல்லூரிகளில் இருந்து வருகிறது. 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் ராக்கிங் மிக அதிக அளவில் இருந்தது. ஆனால், ஒரு மாணவன் ராக்கிங் கொடுமையால் இறந்துபோக ராக்கிங்குக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் சில கல்லூரிகளில் ராக்கிங் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் துங்கார்பூர் மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் ஒரு மாணவரை சீனியர் மாணவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் அவர் கல்லூரியில் சேர்ந்த்து முதலே தொடர்ந்து ரேக்கிங் செய்துள்ளனர். ஆனால், இதுபற்றி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிக்காமல் அவர் இருந்திருக்கிறார்.

கடந்த மே 15ம் தேதி அந்த மாணவரை சுமார் 300 முறைக்கும் மேல் தோப்புக்கரணம் போட வைத்திருக்கிறார்கள். இதனால் சிறுநீரகத்தில் அதிக அளவிலான அழுத்தம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு 4 முறை அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது. அதன் பின்னரே கடந்த 20ம் தேதி கல்லூரி நிர்வாகத்திற்கு ஒரு ஆன்லைன் புகார் வந்திருக்கிறது. இதுபற்றி விசாரித்தபோது இந்த ராக்கிங் விஷயம் நிர்வாகத்திற்கு தெரிய வந்திருக்கிறது.

எனவே, இதுபற்றி விசாரணை நடத்திய கல்லூரி முதல்வர் 7 மாணவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட மாணவனின் உடல்நிலை இப்போது நன்றாக இருப்பதாகவும், கல்லூரிக்கு அவர் வர துவங்கியிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

google news
Continue Reading

india

திருமணத்திற்கு வற்புறுத்தியா தாய் – தம்பி!. திட்டமிட்டு கொலை செய்த மகள்!..

Published

on

murder

தனக்கு பிடித்தவனை திருமணம் செய்ய தடையாக இருந்த அம்மா, அப்பாவை கொலை செய்த பெண்கள் பற்றி கூட நாம் கேள்விப்படிருக்கிறோம். அல்லது கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவன் அல்லது மாமியாரை கொலை செய்த பெண்களையும் பற்றி செய்திகள் படித்திருக்கிறோம்.

ஆனால், தன்னை திருமணத்திற்கு வற்புறுத்தியதற்காக தாய் மற்றும் தம்பியை கொலை செய்த இளம்பெண் பற்றிய செய்தி வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஹரியானாவின் யமுனா நடிகரில் வசித்து வந்தவர் மீனா. இவருக்கு ஒரு மகன், மகள் உண்டு. மகளின் பெயர் காஜல், இவருக்கு 27 வயது ஆகிறது. சமீபத்தில் மீனாவும், காஜலின் தம்பியும் வீட்டில் இறந்து கிடந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இப்போதுதான் திடுக்கிடும் தகவல்கள் அவர்களுக்கு தெரியவந்தது. காஜலுக்கு ஒரு ஆண் போல இருக்க வேண்டும் என்பது ஆசை. அதாவது, ஆண்கள் அணியும் உடைகளை அணிவது, சுதந்திரமாக வெளியே சுற்றுவது என இருக்க ஆசை. ஆண்கள் போல உடையணிந்து இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களையும் ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.

murder

ஆனால், திருமணம் செய்துகொள்ளும்படி அவரை அவரின் அம்மா மீனாவும், தம்பியும் அடிக்கடி நச்சரித்து வந்தனர். எனவே, அவர்களை கொலை செய்வது என முடிவெடுத்தார் காஜல், இதற்காக தனது உறவினர் கிருஷ்(18) என்பவரை துணைகு அழைத்திருக்கிறார். ‘நீ இதற்கு உதவி செய்தால் என் பாட்டி எனக்கு எழுதி வைத்த வீட்டை உனக்கு தருகிறேன்’ என ஆசை காட்டியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து மீனா வீட்டில் இருந்தபோது அவரை கீழே தள்ளி காஜல் கையை பிடித்துக்கொள்ள கிரிஷ் மூச்சை அமுக்கி கொலை செய்துள்ளார். அதன்பின் வீட்டிற்கு வந்த தம்பியையும் அதுபோலவே இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். அதன்பின் எதுவும் தெரியாதது போல இருவரும் வெளியே சென்றுவிட்டனர். ஆனால், போலீசாரின் சந்தேகப்பார்வை காஜல் மீது விழுந்ததால் இப்போது அவரும், அவருக்கு உதவி செய்த கிருஷும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

google news
Continue Reading

india

கணவனிடம் வெயிட்லாஸுக்கு போட்ட ஸ்பெஷல் அக்ரிமெண்ட்… மொக்கை வாங்கியதால் விவகாரத்து கோரும் மனைவி…

Published

on

By

இப்போது இருக்கும் தம்பதிகள் தும்மினாலே விவகாரத்து கேட்டு படியேறும் நிலைக்கு வந்துவிட்டனர். விநோத காரணங்களுக்கு டைவர்ஸுக்காக வரும் கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் அந்த லிஸ்ட்டில் புதிதாக ஒரு காரணமும் இணைந்து இருக்கிறது.

உத்திர பிரதேச மாநிலம் நியூ ஆக்ரா பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு இன்ஸ்டாவில் ஜிம் பயிற்சியாளர் ஒருவர் நண்பராக கிடைத்து இருக்கிறார். இருவருக்கும் நட்பாக தொடங்கிய பழக்கம் பின்னர் காதலாக மாறியதாம். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து இருக்கின்றனர்.

இளம்பெண்ணோ கல்யாணத்துக்கு பின்னர் தன்னுடைய உடல் எடையை குறைக்க பயிற்சி கொடுக்க வேண்டும் என்ற கண்டிஷனுடன் தான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லி இருக்கிறார். காதலரும் டபுள் ஓகே போட்டு திருமணமும் முடிந்ததாம். ஆனால் ஒரு வருடம் கழிந்தும் இளம்பெண் 75 கிலோவில் தொடர்ந்து இருந்தாராம்.

உடல் எடையில் மாற்றமே இல்லாமல் போக கணவர் மீது செம கடுப்பாகி இருக்கிறார். இதையடுத்து அப்பகுதியில் இருக்கும் குடும்பநல நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு மனு போட்டு இருக்கிறார். இதை தொடர்ந்து நடந்த விசாரணையில் என்னுடைய உடல் எடையை குறைத்துக்காட்டுவதாக கூறி என்னை மணந்து கொண்டார்.

ஆனால் என்னுடைய உடல் எடையில் மாற்றமே இல்லை. பொய்யான தகவலை கூறி என்னை மணந்து இருக்கிறார். இனி அவருடன் என்னால் வாழ முடியாது என மனைவி தெரிவித்தார். கணவரோ மனைவியுடன் வாழ வேண்டும் எனக் கூறி இருக்கிறார். இருவருக்கும் மனநல ஆலோசனை கொடுத்தும் மனைவி தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: சாதிவாரியாக கணக்கெடுப்பு!.. முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்ற

google news
Continue Reading

india

இது புதுரகமால்ல இருக்கு – ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் மோசடி… தம்பதியின் பலே ட்ரிக்!

Published

on

By

டெல்லி மற்றும் குர்கான் பகுதியில் உள்ள பல்வேறு 5 நட்சத்திர ஹோட்டல்களில் மோசடி செய்யும் ஒரு தம்பதி குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து உதித் பண்டாரி என்கிற ட்விட்டர் பயனாளர் பகிர்ந்துள்ள தகவல் இதுதான். `குர்கானில் நண்பர் ஒருவரின் வீட்டு பார்ட்டி ஒன்றில் மத்தியதர வயதுள்ள ஒரு தம்பதியினரை சந்தித்தேன். அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு அதிர்ச்சியான விஷயத்தை ரொம்ப ஆர்வமாக பகிர்ந்தார்கள்.

டெல்லி – குர்கானில் இருக்கும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் அடிக்கடி சாப்பிடும் வழக்கம் கொண்டவர்களாம் அவர்கள். ஆனால், அந்த ஹோட்டல்களுக்குச் செல்லும்போது உயிரற்ற பூச்சியைக் கையோடு எடுத்துச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே, கொஞ்ச நேரத்தில் உணவில் அந்த பூச்சியை வைத்துவிட்டு உணவில் பூச்சி கிடப்பதாக பிரச்னையைக் கிளப்புவார்களாம்.

இதனால், பெரும்பாலான ஹோட்டல்களில் அவர்கள் சாப்பிட்ட உணவுக்குப் பணம் கொடுக்காமல் வெளியேறவும் முடியும் என்று சொல்கிறார்கள். அவர்களைப் பார்த்தால் பண கஷ்டம் இருப்பவர்கள் போல் தெரியவில்லை. ஆனால், விளையாட்டுக்காக இதை செய்வதாக பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இந்த ட்ரிக்கைப் பயன்படுத்தி பல நட்சத்திர ஹோட்டல்களில் இலவசமாக உணவு உண்டதாகவும் சொல்கிறார்கள்’ என்று பகிர்ந்திருக்கிறார்.

இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. `இப்படியெல்லாம் மனிதர்கள் நிஜத்தில் இருப்பார்களா?’ என்று ஒருவர் கமெண்ட் செய்திருக்கிறார். மற்றொருவரோ தனது சகோதரரின் அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார். `என்னுடைய சகோதரரர் பிரபலமான மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் பணியாற்றுகிறார்.

அங்கு வரும் சிலர் பர்கர், ஃப்ரைஸ் எல்லாம் ஆர்டர் செய்துவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே, திடீரென பிரெட், காய்கறிகள் எல்லாம் சரியில்லை என புகார் தெரிவித்து சத்தமிடுவார்களாம். மெக்டொனால்ட்ஸ் நிறுவன கொள்கையின்படி அவர்களுக்கு அந்த குறிப்பிட்ட உணவுக்குப் பதில் வேறு உணவு வகைகளோ அல்லது கூடுதலாக சில சலுகைகளோ கொடுக்கப்படும். இது வாடிக்கையாக நடக்கும் விஷயம்தான்’ என்று பகிர்ந்திருக்கிறார்.

google news
Continue Reading

Trending