india
சட்டசபையில் நிறைவேறிய தீர்மானம்!.. கேரளம் ஆகிறது கேரளா!…
1956ம் வருடம் மொழிவாரியாக இந்தியாவில் உள்ள மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரளா உருவானது. அப்போது அந்த மாநிலம் அது கேரளம் என அழைக்கப்பட்டது. ஆனால், ஆங்கிலத்தில் கேரளா என அழைக்கப்பட்டது. அரசியலமைப்பின் அட்டவணையிலும் கேரளா என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், கேரளம் என மாற்ற வேண்டும் என நீண்ட வருடங்களாக அம்மாநில மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், கேரளாவை கேரளம் என மாற்ற கோரி கடந்த ஆகஸ்டு மாதம் கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சில திருத்தங்களை செய்து மத்திய அரசு அனுப்பி வைத்தது. இந்நிலையில், சட்டபையில் முதல்வர் பிரனாயி விஜயன் இந்த மசோதாவை முன் மொழிந்தார்.
மேலும், அரசியலமைப்பின் அட்டவணையிலும் அனைத்து மொழிகளிலும் கேரளம் என்றே குறிப்பிட வேண்டும் எனவும் அவர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். இந்த திர்மானத்துக்கு எதிர்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர். எனவே, இந்த தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஷம்சீர் அறிவித்தார். அதன்பின் நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.