india
எங்களை சீண்டினால் நாங்களும் சீண்டுவோம்… தமிழக அரசுக்கு வார்னிங் கொடுத்த கேரள அமைச்சர்…
பிற மாநில பதிவெண் கொண்ட வாகனங்களை தமிழ்நாட்டில் இயக்க கூடாது என தடை போடப்பட்டு இருக்கும் நிலையில் கேரள அமைச்சர் தமிழக அரசை வெளிப்படையாக மிரட்டி இருப்பது வைரலாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்களை இயக்க கூடாது என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. தமிழகத்தின் இந்த தடையை நடைமுறை படுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் ஒரே வரி என மத்திய அரசு அறிவிக்க இருக்கும் நிலையில் அரசு பஸ்கள் காலாண்டுக்கு ஒரு சீட்டுக்கு 4000 ரூபாய் வரை வரியை அதிகமாக உயர்த்தி இருப்பதாக கேரளா குற்றம்சாட்டி இருக்கிறது. இதுகுறித்து கேரளா சட்டசபையில் பேசிய கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கே.பி.கணேஷ்குமார் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து சட்டசபையில் அவர் பேசும்போது, 4000 ரூபாய் கட்டணத்தினை கேரளாவிடம் விவாதிக்காமலே தமிழக அரசு உயர்த்தி இருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசிடம் பேசியும் பயனில்லை. அதனால் கேரளாவும் உயர்த்தலாம். தமிழ்நாட்டினருக்கு புரியவில்லை. சபரிமலை சீசன் வருகிறது. அங்கிருந்து தான் கேரளாவுக்கு நிறைய வாகனங்கள் வரும்.
நாங்களும் எங்கள் கஜானாக்களை நிறைத்து கொள்கிறோம். இங்கிருந்து செல்பவர்களை தொந்தரவு செய்தால் அங்கிருந்து இங்கு வருபவர்களையும் தொந்தரவு செய்வோம். எங்க பஸ்களை பறிமுதல் செய்தால் உங்கள் வாகனத்தினையும் பறிமுதல் செய்வோம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.