latest news
வாழ மறுத்த மனைவி!.. கணவர் செய்த வெறிச்செயல்!.. பரமக்குடியில் அதிர்ச்சி!..
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் லெனின் தெருவில் வசித்து வந்தவர் மேகலா. இவருக்கு வயது 25. சில வருடங்களுக்கு முன்பு இவர் பரமேஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 பெண் குழந்தைகளும் உண்டு. பரமேஸ்வரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2 வருடங்களாக அவரை பிரிந்து தனது அம்மா வீட்டில் வாழ்ந்து வந்தார்.
அதன்பின் மணிகண்டன்(24) என்பவரோடு இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அதன் பின் அவரை 2வது திருமணமும் செய்து கொண்டார். இருவரும் பரமக்குடி பாரதிநகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்தனர். ஒருகட்டத்தில் அவர்கள் இருவருக்கும் இடையேயும் பிரச்சனை ஏற்பட்டது. எனவே, மணிகண்டனிடம் பேசுவதை தவிர்த்தார். அதோடு, மணிகண்டன் மீது காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தார். அதன்பின் இருவரையும் அழைத்து பேசி போலீசார் அனுப்பி வைத்தனர்.
நேற்று மாலை 4 மணியளவில் மேகலா பெரிய கடை பஜாரில் பனியாரம் சுட்டு விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த மணிகண்டன் தன்னோடு வாழ வருமாறு அவரை அழைத்திருக்கிறார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மேகலாவின் முதுகில் குத்தினார். இதில், ரத்தவெள்ளத்தில் சரிந்தார் மேகலா.
அங்கிருந்த தப்பி ஓட முயன்ற மணிகண்டனை அப்பகுதி துணிச்சலாக பிடித்து அருகில் இருந்த கம்பத்தில் கட்டி வைத்தனர். போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதற்குள் மேகலா உயிரிழந்தார். போலீசார் மணிகண்டனை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேகலாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.