latest news
மீண்டும் ஒரு பதக்கத்துக்கு ஆசைப்பட்ட இந்தியாவிற்கு ஏமாற்றம்… மனு பாக்கர் நான்காவது இடம்!
இந்தியாவிற்கு முதல் இரண்டு பதக்கங்களை வாங்கி கொடுத்த மனு பாக்கரின் ஹார்ட்ரிக் வெற்றிகனவு தற்போது தகர்ந்திருக்கிறது. நான்காவது இடம் பிடித்த போட்டியிலிருந்து வெளியேறியிருக்கிறார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்று வாங்கி கொடுத்தவர் மனு பாக்கர். இந்தியாவிற்கு பெரிய உத்வேகத்தினை கொடுத்தது. தொடர்ச்சியாக கலப்பு இரட்டையர் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து 10மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மீண்டும் ஒரு வெண்கலத்தை வென்றார்.
இதை தொடர்ந்து இந்தியாவிற்கு ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் பெண்மணி என்ற அங்கீகாரத்தை மனு பாக்கர் பெற்றார். இதை தொடர்ந்து தற்போது மூன்றாவதாக 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் கலந்து கொண்டார். இதில் தகுதி சுற்றுகளில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
கண்டிப்பாக இந்தியாவிற்கு இன்னொரு பதக்கத்தை மனு பாக்கர் பெற்று தருவார் என ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக மனு பாக்கர் போட்டியில் நான்காம் இடம் பிடித்து தோல்வியை தழுவி இருக்கிறார். பின்னர் குறித்து பேசிய மனுப்பாக்கர், நான் ரொம்பவே பதட்டமாக இருந்தேன்.
நான் இரண்டு பதக்கங்களை பெற்றாலும், இந்த மூன்றாவது தோல்வியை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதுவரை ஒலிம்பிக் தொடங்கியிருந்து நான் மதிய உணவை உண்ணவே இல்லை. காலையில் உண்டு விட்டு பயிற்சிக்காக வந்து விடுவேன். இன்று போய் தான் மதிய உணவை சாப்பிட போகிறேன் எனவும் கூறி சென்றது குறிப்பிடத்தக்கது.