latest news
சூறையாடப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம்… சாதி மறுப்பு திருமணத்துக்கு இப்படியா?
திருநெல்வேலி மாவட்டத்தின் ரெட்டியார்பாளையத்தில் 28வது வயது பெண் இன்னொரு சாதி இளைஞரை காதலிப்பதாகாவும், தங்களுக்கு வீட்டில் எதிர்ப்பு இருப்பதாகவும் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதையடுத்து, ஜூன் 13ந் தேதி இந்த ஜோடிக்கு அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் தலைமையில் திருமணம் செய்து வைத்தனர். இந்த தகவல் வீட்டினருக்கு கசிய பெண்ணின் தந்தை தன்னுடைய சொந்தங்கள் 10 பேரை அழைத்துக்கொண்டு அலுவலகத்தினை முற்றுகையிட்டார்.
இதையடுத்து அவரை கட்சி நிர்வாகிகள் மற்றும் பெண் வீட்டினருக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. இதில், கட்சி அலுவலகத்தில் இருந்த கண்ணாடி, இருக்கைகள், கதவு என அனைத்து பொருட்களையும் பெண் வீட்டினர் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் புகார் கொடுத்த நிலையில், பெருமாள்புரம் போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர்.இதனை தொடர்ந்து, பெண் வீட்டினர் உட்பட 13 பேரை கைது செய்து இருக்கின்றனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டதுக்கு எனது கடும் கண்டனம். தேசிய கட்சி அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியின் அலுவலகம் தாக்கப்படுவது என்பதே இந்த விடியா திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தட்சி.
சுயமரியாதை இயக்கம் தழைத்தோங்கிய தமிழ்நாட்டில் இன்றளவும் சாதிய தீண்டாமையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது. கட்சி அலுவகத்தினை தாக்கியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: `எனக்கே விபூதி அடிக்கப் பார்த்தேல’ – தென்னாப்பிரிக்காவுக்கு மரண பயம் காட்டிய நேபாளம்!