Connect with us

health tips

தக்காளி விலை எகிறுது..மெக்டொனால்ட் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு..அட அதுக்காக இப்படியா பண்ணுவாங்க..

Published

on

mecdonald foods

இந்த வெயில் காலத்தில் தக்காளி விலை அனைத்து மாநிலங்களிலும் வானளவிற்கு உயர்ந்து வருகிறது. உத்திரகாண்ட்  மாநிலத்தில் தக்காளி விலை கிலோவிற்கு ரூ.200க்கு விற்கப்படுகிறது. இன்னும் சில மாநிலங்களில் ரூ.250க்கும் கூட விற்பனையாகிறது. தக்காளி மட்டுமல்லாமல் அனைத்து காய்கறிகளின் விலையுமே அதிகமாகத்தான் செய்கிறது என்றுதான் கூற வேண்டும்.

tomato price hike

tomato price hike

இதனால் அனைத்து சாம்னிய மக்களும் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாகவே ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் காய்கறியின் விலை அதிகமாகவே இருக்கும். இதற்கு காரணம் மழைக்காலங்களில் தக்காளி மற்றும் இதர காய்கறிகள் அதிக நேரத்திற்கு புத்துணர்ச்சியாக இருக்க முடியாததே காரணமாகும் அல்லது இவைகளை தொலை தூரங்களில் இருந்து கொண்டு வருவதும் காரணமாக அமையலாம்.

இவ்வாறு தக்காளி விலை ஏற்றத்தினால் பிரபல உணவு நிறுவனமான மெக்டொனால்டு தங்களின் உணவில் தற்போது தக்காளியை சேர்ப்பதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. தக்காளி விலை சாமானிய மனிதனின் பொருளாதாரத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் ஹோட்டல்கள் மற்றும் பெரிய ரெஸ்டாரண்ட்களையும் பாதிக்கிறது என்றுதான் கூறவேண்டும். இதன் காரணமாகவே மெக்டொனால்ட் நிறுவனம் இப்படி ஒரு முடிவினை எடுத்துள்ளது. இதனை பற்றி அந்நிறுவனம் அளித்த தகவலின்படி தரமான தக்காளி கிடைக்காமல் போவதாலும் அது வாடிக்கையாளர்களின் உணவு தரத்தினை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது என்பதற்காவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

tomato reaches sky price

tomato reaches sky price

தக்காளியை எவ்வாறு நீண்ட நாட்களுக்கு வைத்து கொள்வது?:

நாம் தக்காளியை தேர்வி செய்து வாங்கும் பொழுது நல்ல பழுத்த பழங்களாய் வாங்காமல் காய் தக்காளியை வாங்குவதனால் அது நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக வைக்க முடியும். மேலும் தக்காளியின் மேல் உள்ள காம்பினை நீக்காமல் வைத்திருந்தாலும் நாம் இவைகளை அழுக விடாமல் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *