Connect with us

latest news

மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம்!.. சட்டசபையில் வெளியாகுமா அறிவிப்பு!..

Published

on

magalir

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மகளிர் உரிமையாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தெரிவித்தது. தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என பெயரிடப்பட்டது.

2023ம் வருடம் மறைந்த முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி அன்று இந்த திட்டம் முதல்வர் ஸ்டாலினால் துவங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் இதற்காக விண்ணப்பித்தனர்.

அதில் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. மீதமுள்ள பேர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. எதிர்கட்சிகள் இதை கடுமையாக விமர்சனம் செய்தன. எனவே, நிராகரிக்கப்பட்டவர்கள் சரியான காரணத்துடன் மீண்டும் விண்ணப்பித்தால் அவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்பின் பலரும் விண்ணப்பித்தனர்.

அதன் காரணமாக மேலும், 11 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளை தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. இதில், மானியக்கோரிக்கை நடைபெறவிருக்கிறது.

இதில், மகளிர் உரிமைத்தொகை திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்கிற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வெளியானால் மேலும் சில லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத்தொகை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

திடீர் உடல்நலக் குறைவு! – பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி!..

Published

on

advaani

20 வருடங்களுக்கு முன்பு வரை பாஜகவில் முக்கிய தலைவராக இருந்தவர் எல்.கே.அத்வானி. இந்தியாவின் துணை பிரதமராகவும் இவர் இருந்திக்கிறார். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் மூளையாக செயல்பட்டவர் இவர். பாஜக ஆட்சிக்கு வந்தால் அத்வானிதான் பிரதமர் என்கிற நிலை இருந்தது.

ஆனால், குஜராத்தில் தொடர்ந்து 3 முறை முதலைமைச்சராக இருந்த நரேந்திர மோடியை பாஜக பிரதமராக்கியது. நரேந்திர மோடி பிரதமரானதும் அத்வானியின் புகழ் குறைய துவங்கியது. சில அரசியல் மேடைகளில் பிரதமர் மோடியை பார்த்து அத்வானி எழுந்து நின்று கும்பிட, மோடி அதை கண்டு கொள்ளாமல் போன வீடியோக்களும் வெளியானது.

தற்போது வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் இருந்து அத்வானி ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே, எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அத்வானிக்கு இப்போது 96 வயதாகிறது. மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவமனையில் முதியோர் பிரிவு சிறப்பு மருத்துவர்கள் அவரின் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள்.அதேநேரம், அவரின் உடல்நிலை குறித்து எந்த விபரங்களும் மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.

google news
Continue Reading

latest news

சட்டசபையில் சஸ்பெண்ட்!.. அதிமுக எம்.ல்.ஏக்கள் இன்று உண்ணாவிரத போராட்டம்…

Published

on

eps

கள்ளக்குறிச்சி விஷச்சாரய விவகாரத்தில் 60 பேர் உயிரிழந்துவிட்டனர். இதற்கு திமுக அரசியன் அலட்சியமே காரணம் என அதிமுக தொடர்ந்து சொல்லி வருகிறது. அதோடு, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சொல்லி தமிழக முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

இந்த சம்பவம் நடந்த நாள் முதலே அதிமுக எம்.எல்.ஏக்கள் கருப்புச்சட்டை அணிந்து சட்டசபைக்கு வர துவங்கினார்கள். கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து தொடர்ந்து சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கடும் அமளியில் ஈடுபட்டு பின் வெளிநடப்பு செய்வதும் தொடர்ந்து வருகிறது. இதைத்தொடர்ந்து அவை அலுவல்களை நடத்தவிடாமல் தொடர் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்தும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தவிருக்கிறார்கள். இதற்காக வள்ளுவர் கூட்டம் உட்பட 4 இடங்களில் அனுமதி கேட்டு அதிமுக சார்பில் காவல்துறையிடம் மனு கொடுக்கப்பட்டது.

ஆனால், எழும்பூர் ராஜரத்தின் மைதானத்தின் அருகே நிபந்தனைகளுன் கூடிய போரட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளிக்கப்பட்டிருகிறது. போராட்டம அமைதியாக நடக்க வேண்டும் எனவும், போராட்டம் நடத்தும் இடத்திற்கு வாகனங்களை கொண்டு செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

google news
Continue Reading

latest news

பாகிஸ்தானில் போட்டு பொளக்கும் வெயில்!. 4 நாட்களில் 450 பேர் மரணம்…

Published

on

karachi

பொதுவாக வெயில் காலம் என்றாலே வெயிலின் வெப்பத்தால் வயது முதியவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இந்தியா முழுவதும் நடக்கும். அதனால்தான் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வயதானவர்கள் வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் சொல்வதுண்டு. குறிப்பாக கத்திரி வெயில் என சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயிலின் கொடுமை மிகவும் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் கடந்த 4 நாட்களில் வெயிலும் தாக்கத்தால் 450 பேர் உயிரிழந்திருப்பதாக ஒரு தன்னார்வ நிறுவனம் சொல்லி இருக்கிறது. கராச்சி என்பது பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய நகரம் ஆகும். கடந்த சனிக்கிழமை முதலே கராச்சியில் கடுமையான வெப்பம் நிலவி வந்தது.

3வது நாளிலும் வெயில் குறையாமல் 40 டிகிரி செல்சியசிஸை தாண்டி வெப்பம் நிலவியது. சில இடங்களில் வெப்பக்காற்றும் வீசியது. குறிப்பாக கடலோர பகுதிகளில் அதிக வெப்பம் காணப்பட்டது. கடந்த நான்கு நாட்களில் 427 உடல்களை பெற்றதாக எதி அறக்கட்டளை தெரிவித்திருக்கிறது. அதேபோல் மூன்று மருத்துவமனைகளில் இருந்து சித்து அரசாங்கம் நேற்று 23 உடல்களை பெற்றதாக கூறியிருக்கிறது.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள எதி டிரெஸ்ட்டின் தலைவர் ‘கராச்சியில் 4 சவக்கிடங்குகள் செயல்படுகிறது. இப்போது எங்களின் சவக்கிடங்கில் உடல்களை வைக்க முடியாத அளவுக்கு பிணங்கள் நிரம்பி விட்டது. புதிய உடல்களை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

india

அதிக முறை தோப்புக்கரணம்!.. ராக்கிங் கொடுமையால் மருத்து கல்லூரி மாணவருக்கு சிறுநீரகம் பாதிப்பு!..

Published

on

ragging

ராக்கிங் என்பது பல வருடங்களாக கல்லூரிகளில் இருந்து வருகிறது. 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் ராக்கிங் மிக அதிக அளவில் இருந்தது. ஆனால், ஒரு மாணவன் ராக்கிங் கொடுமையால் இறந்துபோக ராக்கிங்குக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் சில கல்லூரிகளில் ராக்கிங் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் துங்கார்பூர் மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் ஒரு மாணவரை சீனியர் மாணவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் அவர் கல்லூரியில் சேர்ந்த்து முதலே தொடர்ந்து ரேக்கிங் செய்துள்ளனர். ஆனால், இதுபற்றி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிக்காமல் அவர் இருந்திருக்கிறார்.

கடந்த மே 15ம் தேதி அந்த மாணவரை சுமார் 300 முறைக்கும் மேல் தோப்புக்கரணம் போட வைத்திருக்கிறார்கள். இதனால் சிறுநீரகத்தில் அதிக அளவிலான அழுத்தம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு 4 முறை அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது. அதன் பின்னரே கடந்த 20ம் தேதி கல்லூரி நிர்வாகத்திற்கு ஒரு ஆன்லைன் புகார் வந்திருக்கிறது. இதுபற்றி விசாரித்தபோது இந்த ராக்கிங் விஷயம் நிர்வாகத்திற்கு தெரிய வந்திருக்கிறது.

எனவே, இதுபற்றி விசாரணை நடத்திய கல்லூரி முதல்வர் 7 மாணவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட மாணவனின் உடல்நிலை இப்போது நன்றாக இருப்பதாகவும், கல்லூரிக்கு அவர் வர துவங்கியிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

google news
Continue Reading

india

திருமணத்திற்கு வற்புறுத்தியா தாய் – தம்பி!. திட்டமிட்டு கொலை செய்த மகள்!..

Published

on

murder

தனக்கு பிடித்தவனை திருமணம் செய்ய தடையாக இருந்த அம்மா, அப்பாவை கொலை செய்த பெண்கள் பற்றி கூட நாம் கேள்விப்படிருக்கிறோம். அல்லது கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவன் அல்லது மாமியாரை கொலை செய்த பெண்களையும் பற்றி செய்திகள் படித்திருக்கிறோம்.

ஆனால், தன்னை திருமணத்திற்கு வற்புறுத்தியதற்காக தாய் மற்றும் தம்பியை கொலை செய்த இளம்பெண் பற்றிய செய்தி வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஹரியானாவின் யமுனா நடிகரில் வசித்து வந்தவர் மீனா. இவருக்கு ஒரு மகன், மகள் உண்டு. மகளின் பெயர் காஜல், இவருக்கு 27 வயது ஆகிறது. சமீபத்தில் மீனாவும், காஜலின் தம்பியும் வீட்டில் இறந்து கிடந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இப்போதுதான் திடுக்கிடும் தகவல்கள் அவர்களுக்கு தெரியவந்தது. காஜலுக்கு ஒரு ஆண் போல இருக்க வேண்டும் என்பது ஆசை. அதாவது, ஆண்கள் அணியும் உடைகளை அணிவது, சுதந்திரமாக வெளியே சுற்றுவது என இருக்க ஆசை. ஆண்கள் போல உடையணிந்து இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களையும் ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.

murder

ஆனால், திருமணம் செய்துகொள்ளும்படி அவரை அவரின் அம்மா மீனாவும், தம்பியும் அடிக்கடி நச்சரித்து வந்தனர். எனவே, அவர்களை கொலை செய்வது என முடிவெடுத்தார் காஜல், இதற்காக தனது உறவினர் கிருஷ்(18) என்பவரை துணைகு அழைத்திருக்கிறார். ‘நீ இதற்கு உதவி செய்தால் என் பாட்டி எனக்கு எழுதி வைத்த வீட்டை உனக்கு தருகிறேன்’ என ஆசை காட்டியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து மீனா வீட்டில் இருந்தபோது அவரை கீழே தள்ளி காஜல் கையை பிடித்துக்கொள்ள கிரிஷ் மூச்சை அமுக்கி கொலை செய்துள்ளார். அதன்பின் வீட்டிற்கு வந்த தம்பியையும் அதுபோலவே இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். அதன்பின் எதுவும் தெரியாதது போல இருவரும் வெளியே சென்றுவிட்டனர். ஆனால், போலீசாரின் சந்தேகப்பார்வை காஜல் மீது விழுந்ததால் இப்போது அவரும், அவருக்கு உதவி செய்த கிருஷும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

google news
Continue Reading

Trending