Connect with us

Cricket

மட்டன் இருந்தா போதும் மிரள வச்சிருவாரு…சாப்பிட்டுட்டு வந்தா சம்பவம் தானாம் போங்க…

Published

on

Sami

கிரிக்கெட் விளையாட்டு உலகம் எங்கும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. புதிதாக இந்த விளையாட்டினை பார்ப்பவர்களின் கவனத்தை பெரிதாக ஈர்த்தும் வருகிறது. ஆரம்பகாலத்தில் இந்த விளையாட்டில் பேட்ஸ்மேன்களே அதிகமாக ஆதீக்கம் செய்து வந்திருக்கின்றனர். காலம் செல்லச் செல்ல இந்த நிலை அப்படியே மாறத்துவங்ககியது.

பந்து வீச்சாளர்களும் போட்டியின் வெற்றி, தோல்வியை தீர்மாணிக்கும் இடத்திற்கு வரத்துவங்கினர். பின்னர் அனைவருக்குமான போட்டியாக மாறத்துவங்கியது. அதிலும் வேகப்பந்து வீச்சு அதிக முக்கியத்துவத்தை பெறத்துவங்கியது.

சுழல் பந்துவீச்சில் இந்திய வீரர்களைத் தவிர மற்றவர்களால் செயல் பட முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால் அதிலும் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே, இலங்கையின் முத்தையா முரளிதரன் போன்றாவர்கள் தங்களது சுழலால் எதிரணியை கலங்கடிக்கச்செய்து வந்தனர்.இந்தியாவிலும் கிர்மாணி,அனில் கும்ளே, அஸ்வின் என வரிசையாக வந்த வீரர்கள் தங்களது சுழலால் எதிரணியை அலற அடிக்கச் செய்தனர்.

ஆனால் கபில்தேவின் வருகைக்கு பின்னரே தான் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்களை உற்று நோக்கத் துவங்கியது. அதன் பின்னர் வந்த ஸ்ரீநாத், ஜாகீர் கான், அகார்க்கர், இர்பான் பதான், பும்ரா என பேட்ஸ்மேனங்களுக்கு மிரட்டல் விடக் கூடியவர்களாக மாறியவர்கள்.

Mohammad Sami

Mohammad Sami

இந்த வரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மிகப் பிரபலமானார் ஸ்டெம்புகளை குறி வைக்கும் தனது துல்லியமான பந்துகளால். முகமது சமீபத்தில் நடந்து முடிந்த இருபது ஓவர் உலக்கோப்பையின் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இந்த நேரத்தில் ஷமி பந்து வீச்சின் வேகத்தை பற்றிய ரகசியத்தை உடைத்துள்ளார் ஷமியின் நண்பர்.

இப்போது வைரல் ஆகிவருவது ஷமி பற்றி அவரது நெருங்கிய நண்பரான உமேஷ் குமார் சொல்லியுள்ளது தான். ஆட்டு இறைச்சி பிரியராம் முகமது ஷமி. இது இல்லாமல் ஒரு நாள் கூட அவரால் இருந்து விட முடியாதாம். அதையும் மீறி ஷமி மட்டன் கறி சாப்பிடாமல் இருந்து விட்டால் பந்து வீச்சில் இருக்கும் அவரது வேகம் அப்படியே குறைந்து விடுமாம்.

google news