india
ஆர்.எஸ்.எஸ்.க்கு சாதகமாக செயல்படும் மோடி?…கடும் கண்டனம் சொன்ன எம்.பி…
மத்திய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அங்கம் வகிக்கக் கூடாது என்ற தடை விலக்கப்பட்டிருப்பதற்கு தமிழக எம்.பி. வெங்கடேசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். தேசப்பிதா காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வலது சாரி இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.க்கு சர்தார் வல்லபாய் பட்டேல் தடை விதித்தார். நன்னடத்தியின் காரணமாக அந்த தடை விலக்கப்பட்டது.
அதன் பின்னர் 1966ம் ஆண்டு பசுக்கொலைகளுக்கு எதிராக தீவரமான போராட்டங்களை மேற்கொண்டது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. போராட்டத்தின் உச்சம் நாடாளுமன்றம் வரை சென்றது. இதனால் அப்போதைய பிரதமரான இந்திரா காந்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீது மீண்டும் தடை உத்தரவை பிறப்பித்தார்.
அதோடு மத்திய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது, அமைப்பின் கூட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது எனவும் தடை பிறப்பிருந்தார்.
இந்நிலையில் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக பதவி ஏற்றுள்ள பாஜக அரசு இந்த தடையை தற்போது நீக்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த அறிவிப்பிற்கு மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் இந்த கண்டன அறிக்கையில் சாவர்கர் பிறந்த தினத்தன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்த மோடி அரசு, மத்திய அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ்.க்கு அனுப்பும் இந்த உத்தரவிற்கு எனது கடுமையான கண்டனம் என குறிப்பிட்டுள்ளார்.
மோடி மீது அதிருப்தியில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு இருப்பதால் அவர்களை சமாதனப்படுத்தும் விதமாகத் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என எதிர்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.