india
தங்கம், வெள்ளி என பல சீர்வரிசையுடன்.. அம்பானி குடும்பம் செய்த மிகப்பெரிய விஷயம்… என்னன்னு தெரியுமா…?
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏழை குடும்பத்தை சேர்ந்த 50 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் முகேஷ் அம்பானி திருமணம் செய்து வைத்திருக்கின்றார்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது மகன் ஆனந்த் அம்பானிக்கும் பிரபல தொழிலதிபரின் மகளான ராதிகா மெர்ஜெண்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. அதன் பிறகு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இந்த ஜோடிகளின் திருமணத்தை முன்னிட்டு திருமண கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இத்தாலி நாட்டு கடற்கரையில் மூன்று நாட்கள் சொகுசு கப்பலில் இந்த தம்பதிகளின் திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இதில் பல நடிக,ர் நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். இதைத்தொடர்ந்து முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானி இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை மும்பையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் மகாராஷ்டிராவில் உள்ள பால்கரை என்ற பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
மகனின் திருமணத்திற்கு முன்னதாக இந்த நிகழ்வை செய்து வைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி, மனை நீடா அம்பானி, மூத்த மகனும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகிராம் தலைவருமான ஆகாஷ், மருமகள் ஸ்லோகா அம்பானி, மகள் இஷா அம்பானி மற்றும் அவரது கணவர் ஆனந்த் பிரமல் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருமண ஜோடிகளை மனமார வாழ்த்தியிருந்தார்கள்.
மேலும் மணமக்களுக்கு தலா ஒரு லட்சம் சீதனமாகவும், ஒரு ஆண்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் பல்வேறு வகையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் , கேஸ் அடுப்பு, மிக்சி, மின்விசிறி, ஒரு மெத்தை மற்றும் தலையணைகள் உள்ளிட்ட அனைத்தையும் அவர்கள் சீர்வரிசையாக கொடுத்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் மணமக்களுக்கு மங்களச் சூத்திரம், திருமணம் மோதிரம், மூக்குத்தி உள்ளிட்ட தங்க ஆபரணங்களும் பரிசாக வழங்கப்பட்டது.