Connect with us

latest news

55 ஆண்டுக்கால அடையாளம் மாற்றி… இனி இந்த கல்லூரியில் இவங்களும் படிக்கலாம்… வெளியான சூப்பர் தகவல்…!

Published

on

நந்தனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிப்பதற்கு இனி மாணவிகளுக்கும் அனுமதி உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மிகப் பழமையான கலை மற்றும் அறிவியல் கல்லூரி நந்தனம் அரசு கல்லூரி 1969 ஆம் ஆண்டு மாணவர்களுக்காக தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அண்ணாசாலையில் 1901ஆம் ஆண்டு மதராஸ் என்ற பள்ளி தொடங்கப்பட்ட நிலையில், 1918 ஆம் ஆண்டு காயிதே மில்லத் என்ற கல்லூரியும் தொடங்கப்பட்டது. பின்னர் 1969 இல் ஆற்காடு நவாப் பெண்களுக்கு தனியாக மகளிர் கல்லூரியை தொடங்கினார்.

அதற்கு பதிலாக நந்தனத்தில் ஆண்களுக்கு என்று தனியாக கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியில் படித்தவர்கள் பலர் தற்போது முக்கிய தலைவர்களாக இருக்கிறார்கள். இப்படி பல பெருமையும் மிகுந்த இந்த கல்லூரியில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து வருகிறார்கள். போராட்டம் நடத்துவது, மோதல், பஸ் கூரை மீது ஆட்டம் போடுவது என்ற சம்பவங்கள் நடைபெற்றன.

இதனை கல்லூரி நிர்வாகமும் போலீசாரும் இணைந்து கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். இந்நிலையில் இந்த கல்லூரியில் மாணவிகளை சேர்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் 200 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். இதில் 130-து பேருக்கு கல்லூரியில் சேர்வதற்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடப் பிரிவுகளிலும் மாணவிகள் ஆர்வத்துடன் சேர்ந்து வருகிறார்கள்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *