Connect with us

latest news

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது, தமிழக அரசு தீர்மானத்தை வரவேற்கிறேன்.. தவெக தலைவர் விஜய்..!

Published

on

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை நான் வரவேற்கிறேன் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பேசியிருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் விஜய். சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவர் திடீரென்று தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கின்றார். இந்த கட்சியின் தலைவராக பொறுப்பேற்று இருக்கும் நடிகர் விஜய் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கின்றார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

மேலும் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கிய பிறகு கட்சியின் கொடி மற்றும் சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார். கடந்த வருடம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை தொகுதி வாரியாக தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கி இருந்தார். விஜய் கடந்த வருடம் நடிகராக வழங்கிய விஜய் இந்த வருடம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் என்ற முறையில் பரிசுகளை வழங்கி வருகின்றார்.

இந்த வருடமும் பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இரண்டு கட்டங்களாக பரிசுகளை வழங்குகிறார் விஜய். ஏற்கனவே முதல் கட்டம் கடந்த 28ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் இன்று 2-வது கட்டமாக விருது வழங்கும் விழா நடைபெற்று வருகின்றது.

இதில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், நாகப்பட்டினம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்க தொகையை வழங்குகின்றார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேச மாட்டார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் திடீரென்று மேடை ஏறிய விஜய் நீட் தேர்வு குறித்து பேசி இருக்கின்றார்.

நீட் தேர்வால் தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகள் கிராமப்புறத்தை சேர்ந்த ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவிகள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பது ஒரு உண்மை. நீட் மாநில உரிமைகளுக்கு எதிராக இருக்கின்றது. ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் ஒரே தேர்வு கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிராக இதை நான் பார்க்கிறேன். நீட் தேர்வு முறை கேட்டால் அதன் மீது இருந்த நம்பகத்தன்மை மொத்தமாக போய்விட்டது. நீட் விலக்கு கோரி தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்தை நான் வரவேற்கின்றேன் என்று அவர் பேசி இருந்தார்.

google news