Connect with us

latest news

மதுப்பழக்கத்தால் வந்த பிரச்சனை!.. வீட்டை விட்டு போன மனைவி!.. புதுமாப்பிள்ளை எடுத்து ஷாக்கிங் முடிவு…

Published

on

suicide

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் கே.வி.பழனிச்சாமி நகரில் வசித்து வருபவர் மோகன் குமார். இவரின் வயது 34. இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்டார். ஒரு மாதத்திற்கு முன்பு மோகனுக்கு திருமணம் நடந்தது.

இதைத்தொடர்ந்து மனைவி மற்றும் தாயுடன் ஒரே வீட்டில் வசிந்து வந்தார். மோகனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்திருக்கிறது. இதனால், மனைவிக்கும் அவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார் மோகன்.

இதனால், அவரின் அம்மாவும், அவரின் மனைவியும் திட்டியிருக்கிறார்கள். அப்போது கோபப்பட்டு அவர்களை திட்டி இருக்கிறார் மோகன். இதனால் கோபமடைந்த மோகனின் அம்மாவும், மனைவியும உறவினர் வீட்டுக்கு போய்விட்டனர். இதனால் மனமுடைந்த மோகன் வீட்டிலேயே சேலையால் தூக்கிட்டு தொங்கினார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இருந்தவர்கள் அவரை மீட்டு ஒரு ஆம்புலன்ஸ் வண்டி மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள். அவரை பாரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.

இது தொடர்பாக வெள்ளக்கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்யாணம் ஆன ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *