Connect with us

Featured

கலை இழந்து விட்டதா தீபாவளி பஜார்?…பரவாயில்லை இன்னும் ரெண்டு நாள் இருக்கே!…

Published

on

தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்று. மற்ற பண்டிகைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது தீபாவளி தனிச் சிறப்பு பெறுகிறது. எல்லா மக்களும் கொண்டாடி மகிழும் இந்த பண்டிகையை மட்டுமே நம்பி சில வணிகர்களின் வாழ்வாதாரம் இருந்து வருகிறது.

தீபாவளி என்றதுமே நினைவுக்கு வருவதுன பட்டாசும், புது ஆடைகளும் தான். ஆண்டு முழுவதும் உற்பத்தி நடத்தப்பட்டு வரும் இந்த இரண்டிற்கும் மவுசு அதிகமாகக் காணப்படுவது தீபாவளி பண்டிகையின் போது தான்.

அக்டோபர் மாதம் 31ம் தேதி இந்தாண்டின் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், போன வருடம் மாதிரியான அதிகப்படியான வியாபாரம் கடைகளில் இல்லை என்ற செய்தியை வலைதள செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

ரங்கநாதன் தெரு அல்லது உஸ்மான் சாலையுடன் ஒப்பிடும்போது, ​​பாண்டி பஜாரில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது என சொல்லியிருக்கிறது.

Deepavali

Deepavali

சில வாடிக்கையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள், தீபாவளி பண்டிகை மாத இறுதியில் வருவதால், மக்களுக்கு போனஸ் மற்றும் சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை. இதனால் விற்பனை குறைந்துள்ளதாக தெரிவித்தாகவும் சொல்லியிருக்கிறது.

அதேபோல், என்எஸ்சி போஸ் சாலையில், பட்டாசு உற்பத்தி குறைந்ததால், 5% – 15% வரை விலை அதிகரித்துள்ளதாக, பட்டாசு விற்பனையாளர் ஒருவரும், பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் உற்பத்தியை பாதித்துள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் சிலர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் சொல்லப்பட்டிருக்கிறது.

 

செய்தி வெளியான நேரம் வரை இந்த மந்த நிலை இருப்பதாக உணரப்பட்டாலும், தீபாவளி பண்டிகைக்கு  இன்னும் இரண்டு நாட்கள் உள்ளது. இதனால் எந்த நிமிடத்திலிருந்தும் வியாபாரம் சூடு பிடிக்கத் துவங்கி வியாபாரிகளின் மனக்குறை நீங்கும் என்ற நம்பிக்கையும் இருந்து வருகிறது.

 

google news