Connect with us

latest news

வச்சி செய்யப்போகுதாமே வடகிழக்கு பருவ மழை!…தப்புமா தென் தமிழகம்?…

Published

on

Rain

தென்மேற்கு பருவ மழையால் தமிழகத்தின் ஒரு சில இடங்கள் பயனடைந்தது. அதிகமான மழை பொழிவு முன்னைக் காட்டிலும்  இருந்ததாக புள்ளி விவரங்கள் சொல்லியிருந்தது. சராசாரிக்கும் அதிகமாக மழை பெய்து வெப்பத்தை குறைய வைத்து சில இடங்களை குளிரூட்டியது. வட கிழக்கு பருவ மழையை அதிகமாக எதிர்பார்த்து காத்திருக்கிறது தமிழகம்.

இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை குறித்த முக்கியமான ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். கேரளா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தாண்டு அதிகமான தாக்கம் இருக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது.

வழக்கத்தை விட இம்மாநிலங்களில் மழைப்பொழிவானது அதிகமாவே இருக்கும் என்றும் எப்போதும் பெய்யும் மழையின் அளவினைக்காட்டிலும் இந்தாண்டு நூற்றி பதினோரு சதவீதம் அளவில் மழை பொழிவு அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தனது கணிப்பில் தெரிவித்துள்ளது.

Rainfall

Rainfall

இதனைப் போல வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், தமிழகத்தில் இந்தாண்டு முன்னெப்போதையும் விட அதிகமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் தென் தமிழகத்தினை பொறுத்த மட்டும் மழைப் பொழிவு சற்று குறைவாகவே இருக்கும் என சொல்லியிருந்தார்.

கடந்த ஆண்டு தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் தென் தமிழகத்தில் இந்தாண்டு மழை பொழிவு குறைவாக இருக்கும் என பாலச்சந்திரன் தெரிவித்திருப்பது சிந்திக்க வைத்துள்ளது. கோடை வெயில் வாட்டி வதைத்து நீர் நிலைகளில் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும்போது தென் தமிழகத்தின் நிலைமை இந்தாண்டு எப்படி இருக்கப்போகிறது என யோசிக்க வைத்துள்ளது.

 

google news

latest news

தோல்வியடைந்த திமுக அரசு…பலமான கூட்டணி அமையும் தமிழிசை நம்பிகை..

Published

on

Tamilisai

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தினை ஆட்சி செய்து வரும் திராவிட முன்னேற்றக் கழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பல துறைகளில் தோல்வியை சந்தித்துள்ளதாக தமிழக அரசை கடுமையாக வசைபாடியுள்ளார்.

தமிழகத்தின் முப்பத்தி ஆறு மருத்துவக் கல்லூரிகளில் பதினோறு கல்லூரிகளில் டீன் கிடையாது , பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் கிடையாது, துணை வேந்தர்களை நியமிப்பதில் தமிழக அரசு அவசரம் காட்டவில்லை, மாறாக துணை முதல்வர் நியமனத்தில் அவசரத்தினை தமிழக அரசு காட்டியுள்ளதாக விமர்சித்துள்ளார்.

பதினோறு மருத்துவக் கல்லூரிகளில் டீன் தேர்வு நடந்து கொண்டிருப்பதாக சொல்லப்படும் நேரத்தில், சிறையிலிருந்து வெளியே வந்தவருக்கு உடனடியாக அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது என குற்றம் சாட்டினார்.

udhayanidhi Stalin

udhayanidhi Stalin

தமிழக அரசு பல துறைகளில் தோல்வியை சந்தித்துள்ளதாக விமர்சித்திருந்தார். அமைச்சர் ரகுபதி முதல்வர் ஸ்டாலினை மூலவர் என்றும், உதயநிதியை உற்சவர் என சொல்லியிருந்ததை சுட்டிக்காட்டி பேசிய தமிழிசை தமிழகத்தில் நடக்கும் முறைகேடுகளுக்கெல்லாம் மூலவர் ஸ்டாலின் என்றும், துணை முதல்வர் பதவி கிடைத்து உற்சாகமாக இருப்பதால் உதயநிதி உற்சவர் என விமர்சித்தார்.

அதே போல் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக பல இடங்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது, பல கட்சிகள் சேரும், பலமான கூட்டணி அமையும் வரும் காலங்களில், அது பாஜகவிற்கு ஏற்றமாக அமையும் என்றும் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஏமாற்றத்தையே சந்திக்கும் என்றும் சொல்லியிருந்தார்.

google news
Continue Reading

latest news

சொந்த வீடு வாங்க ரூ. 9 லட்சம் வரை கடன்.. இந்தத் திட்டம் பற்றி தெரியுமா?

Published

on

பிரமதர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டுவந்த திட்டம் தான் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா. சமூகத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்கள், நலிவடைந்த நிலையில் உள்ளவர்களுக்கு வீடு கட்ட உதவுவதே, இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்தத் திட்டம் அறிவிக்கப்பட சமயத்தில், மார்ச் 31, 2022 ஆண்டிற்குள் நாடு முழுக்க 20 மில்லியன் வீடுகளை மலிவு விலையில் கட்டிக் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பிறகு, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான காலக்கெடு டிசம்பர் 2024 வரை நீட்டிக்கப்பட்டது. மேலும், 2.95 கோடி வீடுகளை இந்தத் திட்டத்தின் கீழ் கட்டிக் கொடுக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் போது, வீடு கட்டம் செலவு கணிசமான அளவு குறைந்துவிடும்.

இந்தத் திட்டத்தின் கீழ் குடிசை வீட்டில் வசிப்பவர்கள், எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர், சிறுபான்மையினர், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சமூகத்தின் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் பயன்பெற தகுதியுடையவர்கள் ஆவர். மேலும், தெருவோர வியாபாரம் செய்வோர், கைவினை கலைஞர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சேரியில் வசிப்பவர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நலிவடைந்த பிரிவினர் (EWS), குறைவான வருமானம் கொண்டவர்கள் (LIG) மற்றும் நடுத்தர வருமானம் (MIG) பிரிவினரும் பயன்பெற முடியும். இதில் EWS பிரிவில் இருப்பவர்களுக்கு ரூ. 3 லட்சம் வரையிலும், LIG பிரிவில் உள்ளவர்களுக்கு அதிகபட்சம் ரூ. 6 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. MIG பிரிவில் வருபவர்களுக்கு அதிகபட்சம் ரூ. 9 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

google news
Continue Reading

latest news

சொந்த தொழில் தொடங்க ரூ. 50,000 கடன்.. ஈசியா வாங்குவது எப்படி?

Published

on

தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுதவிர சுயதொழில் செய்பவர்களுக்கு எளிய முறையில் கடன் வழங்கும் நோக்கில் முத்ரா யோஜனா கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சொந்த தொழில் தொடங்குவோருக்கு எளிய முறையில் கடன் வழங்கப்படுகிறது.

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் பெறும் கடன் தொகைக்கு எந்த வித அடமானமும் தேவையில்லை. மேலும், விரைவில் பணம் வழங்கப்பட்டு விடும். முத்ரா திட்டத்தில் மொத்தம் மூன்று பிரிவுகள் உள்ளன. அதில் விஷூ பிரிவில் தான் சிறு குறு வணிகங்களுக்கு கடன் வழங்கப்படும். இந்தியாவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.

பாரத ஸ்டேட் வங்கியில் இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ரூ. 50,000 வரை கடன் பெறலாம். இந்த கடன் தொகைக்கு உத்தரவாதம் மற்றும் பிணை வழங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் திட்டத்தின் கீழ் சிறு தொழில் தொடங்கவோ அல்லது ஏற்கனவே செய்துவரும் சிறுதொழில்களை விரிவுப்படுத்திக் கொள்ள முடியும்.

தொழில் தொடங்குவோர் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 50,000 வரை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு வங்கிகள் சார்பில் மிகக் குறைந்த வட்டி வசூலிக்கப்படும். இந்த கடன் தொகையை அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் கடன் பெறுவதற்கு உத்தரவாதம், பாதுகாப்பு எதுவும் சமர்பிக்க வேண்டாம்.

மேலும், கடன் பெற இதர கட்டணங்கள் எதுவும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் திட்டத்தில் கடன் பெற ஆன்லைன் மற்றும் நேரடியாக வங்கிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

நிபந்தனைகள்:

இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பதாரர் சிறு தொழில்முனைவோராக இருப்பது அவசியம்.

விண்ணப்பதாரர் நிலையான வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் வயது 18 முதல் 65-க்குள் இருப்பது அவசியம் ஆகும்.

கடன் கோரும் வியாபாரம் விவசாயம் அல்லாத துறையுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி. செலுத்தும் பட்சத்தில் அதற்கான பதிவு செய்திருப்பது அவசியம்.

மேற்கூறிய நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்கள் தங்களின் அடையாள அட்டை, முகவரிச் சான்று, சுய புகைப்படம், வங்கி கணக்கு விவரங்கள், வணிகம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஜி.எஸ்.டி. விவரங்கள் அடங்கிய ஆவணங்களுடன் கடன் கோரி விண்ணப்பிக்கலாம்.

google news
Continue Reading

Finance

ஓரே நாளில் ஓரவஞ்சனை காட்டிய தங்கம்…மீண்டும் தலை தூக்கியுள்ள விலை உயர்வு…

Published

on

Gold

நேற்று சென்னையில் விற்கப்பட்ட இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையை விட  இன்றைய விலை உயர்வை சந்தித்துள்ளது. நேற்றைய முன்தினம் கிராம் ஒன்றின் விலை ஏழாயிரத்து ஐம்பது ரூபாய்க்கு (ரூ.7,050/-) விற்கப்பட்டது, ஐம்பத்தி ஆறாயிரத்து அறனூற்றி நாற்பது ரூபாய்க்கு (ரூ.56,640/-)   விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம் இருநூற்றி நாற்பது ரூபாய் (ரூ.240/-)குறைந்து, ஐம்பத்தி ஆறாயிரத்து நானூறு ரூபாயக்கு (ரூ.56,400/-) விற்கப்பட்டது நேற்று.

Silver

Silver

கடந்த இரண்டு நாட்களாக இறங்கு முகத்தில் இருந்து வந்த தங்கத்தின் சென்னை விற்பனை விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

விலை குறைவு இரண்டு நாட்கள் மட்டுமே நீடித்தது, ஏற்றத்தில் சென்றுள்ள விலையால் ஆபரணப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். நேற்றை விட கிராம் ஒன்றிற்கு இன்று ஐம்பது ரூபாய் (ரூ.50/-) உயர்ந்து, ஏழாயிரத்து நூறு ரூபாய்க்கு (ரூ.7,100/-) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு சவரன் நேற்று ஐம்பத்தி ஆறாயிரத்து நானூறு ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் (ரூ.56,400/-) இன்று நானூறு ரூபாய் உயர்ந்து ஐம்பத்தி ஆறாயிரத்து என்னூறு ரூபாய்க்கு (ரூ.56,800/-) விற்கப்பட்டு வருகிறது.  தங்கம் ஒரே நாளில் ஓரவஞ்சனை காட்டி உயர்வை நோக்கி சென்றாலும், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் காணப்படவில்லை.

நேற்று கிராம் ஒன்று நூற்றி ஓரு ரூபாய்க்கு (ரூ.101/-) விற்கப்பட்ட நிலையில் இன்றும் அதே விலையில் தான் இருந்து வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாக (ரூ.1,01,000/-) இருக்கிறது இன்று. உயர்வினை நோக்கி தங்கம் விலை சென்றுள்ளது நகைப்பிரியர்களை மீண்டும் கவலையடையச் செய்துள்ளது.

google news
Continue Reading

Cricket

தன் அணிக்கு அட்வைஸ் கேட்ட முன்னாள் வங்கதேச வீரர்.. மைக்கில் வைத்து பங்கம் செய்த சுனில் கவாஸ்கர்

Published

on

கான்பூர் டெஸ்ட் போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத அளவுக்கு இந்திய அணி சம்பவம் செய்தது. போட்டியின் போது கிட்டத்தட்ட இரண்டறை நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. எனினும், எஞ்சியிருந்த கொஞ்ச நேரத்தில் இந்திய அணி துரிதமாக செயல்பட்டதோடு, போட்டியில் மிக துரிதமாக செயல்பட்டு வெற்றியை தட்டித்தூக்கியது. இந்த வெற்றி மூலம் இந்தியா வங்கதேசம் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இந்தப் போட்டியின் நான்கு மற்றும் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் அதுவரை பார்த்திராத சம்பவங்கள் பல அரங்கேறின. நான்காம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேசம் அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் சவாலை ஏற்படுத்தினர். இதனால் அந்த அணி 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதன்பிறகு முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஜோடி, டெஸ்ட் போட்டியில் டி20 இன்னிங்ஸை ஆடியது. இதன் காரணமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக 50 ரன்கள், 100 ரன்கள், 150 ரன்கள், 200 ரன்கள் மற்றும் 250 ரன்களை அடித்த முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.

இதைத் தொடர்ந்து நான்காம் நாளின் கடைசி செஷனில் 2-வது இன்னிங்ஸ் பேட் செய்ய வங்கதேசம் அணி களமிறங்கியது. அன்றைய நாள் ஆட்டம் முடிவதற்குள் வங்கதேசம் அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. ஐந்தாம் நாள் ஆட்டத்திலும் வங்கதேசம் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அப்போது போட்டியில் கமென்ட்ரி செய்து வந்த முன்னாள் வங்கதேச வீரர் அத்தர் அலி, இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரிடம் வங்கதேசம் பேட்டர்களுக்கு ஏதேம் அறிவுரை கூற விரும்புகின்றீர்களா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுனில் கவாஸ்கர் கமென்ட்ரியில் வைத்து மைக்கில், “ஒரு இந்தியராக், அவர்களிடம் விரைவில் அவுட் ஆக சொல்வேன்,” என்று பதில் அளித்தார்.

பேட்டிங்கில் தடுமாறிய வங்கதேசம் வீரர்களுக்கு அறிவுரை கேட்டவருக்கு, சுனில் கவாஸ்கர் அளித்த பதில் அவர் மட்டுமின்றி அதனை கேட்ட அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. சுனில் கவாஸ்கரின் டைமிங் பதில் இந்திய ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

google news
Continue Reading

Trending