தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியாது… மறுபடியும் முதல்ல இருந்தா…? ஷாக் கொடுத்த சித்தராமையா…!

0
58

தமிழகத்திற்கு தற்போது உள்ள சூழலில் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்து இருக்கின்றார்.

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 99 ஆவது கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு இந்த மாதம் முழுவதும் ஒரு டிஎம்சி தண்ணீரை கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டிருந்தது.

கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டு மாநிலங்களின் வாதங்களை கேட்ட பிறகுதான் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கின்றது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா தெரிவித்திருந்ததாவது: “காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கின்றோம்.

கர்நாடக அணைகளில் சராசரியை காட்டிலும் 28% நீர் குறைவாக உள்ளது.  நீர் குறைவாக இருப்பதை காவிரி மேலாண்மை ஆணைய ஒழுங்காற்று குழு கூட்டத்தில் நாங்கள் வெளிப்படுத்தினோம். ஆனால் காவிரி ஒழுங்காற்று குழு தினமும் ஒரு டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கின்றது.

தற்போது உள்ள சூழலில் ஒரு டிஎம்சி தண்ணீர் திறப்பது என்பது சாத்தியமில்லாதது. காவேரி மேலாண்மை ஆணைய தற்போதைக்கு கர்நாடக அணைக்கு என்ன நீர்வரத்து உள்ளதோ அதை மட்டும்தான் திறந்து விடுவோம் . இது குறித்து 14 ஆம் தேதி மாலை 4 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும்” என்று அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார்.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here