latest news
ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார். அதோடு இரட்டை இலையை டெபாசிட் இழக்க செய்து தமிழக அரசியலில் அருவருக்கத்தக்க அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பிரிந்திருக்கக் கூடிய சக்திகள் அனைவரும் தொண்டர்கள் தான் என்றார்.
தொண்டர்கள் ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது, நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை கேட்டு வாங்கி, ஏழு இடங்களில் டெபாசிட் பறிபோய் இருக்கிறது என்றார். அதோடு பதிமூன்று இடங்களில் மூன்றாவது இடத்தில் வந்திருக்கிறது, பிற பாராளுமன்ற தொகுதிகளிலும் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.
தொண்டர்களை பிரித்து வைத்திருக்கும் காரணத்தினாலேயே ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்காமல் போனது, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய இந்த இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என்றார்.
சுயேட்சையாக தான் போட்டியிட்டு முப்பத்தி மூன்று சதவீத வாக்குகளை பெற்றிருப்பதாகவும், இது தொண்டர்களும், பொது மக்களும் தங்கள் பக்கத்தில் இருப்பதையே இது காட்டியிருப்பதாகவும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிட்ட போது பன்னீர் செல்வம் என்ற பெயரில் ஆறு பேர் களம் கண்டனர் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.