latest news
அந்தர் பல்டி அடித்த ஆன்மீக பேச்சாளர்!…திடிரென கொடுத்த டிவிஸ்ட்!…
அசோக் நகர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவியரிடையே உத்வேக பேச்சு வழங்கிய போது அதே பள்ளியில் பணியாற்றி வரும் மாற்றுத்திரன் படைத்த ஆசிரியர் சங்கர் என்பவருக்கும் பேச்சாளர் மகாவிஷ்ணு என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அழகு குறைபாடு, மாற்றுத்திறன், ஏழ்மையுடன் இந்த பிறவி கிடைக்கை முன் ஜென்மத்தில் செய்த பாவகங்களே காரணம் என மகாவிஷ்ணு பேசிய போது நிகழ்ச்சி மேடையிலேயே வைத்து இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் எழுந்தது.
பூதாகரமாக வெடித்த இந்த சர்ச்சைக்குறிய பேச்சினை கண்டித்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கரை மரியாதை குறைவாக நடத்தியதாக அனைத்து வகை மாற்றுத்திரனாளிகள் சங்கத்தினர் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர்.
இதன் பிறகு பல்வேறு பிரிவுகளில் ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மகாவிஷ்ணுவை ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை காவல் நிலையம் நீதிமன்றத்தில் கோரியிருந்தது. அதே நேரத்தில் மகாவிஷ்ணு தனது ஜாமீனுக்கான மனுவையும் கோரியிருந்தார்.
காவல் துறையினரின் மனு விசாரணைக்கு வந்த போது, தான் காவல் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாகவும் மகாவிஷ்ணு சொல்லியதோடு, தனது ஜாமீன் மனுவையும் வாபஸ் பெற்றார்.
இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சொல்லியிருந்தார். அசோக் நகர் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டியருந்தார்.
இந்நிலையல் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்தே மகாவிஷ்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தது காவல் துறை.