Cricket
பந்து வீச்சில் பட்டய கிளப்பிய பாகிஸ்தான்…சரண்டரான இங்கிலாந்து?…
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணியின் மீது அதனை எதிர்த்து விளையாடும் அணிகளுக்கு இருக்கும். அதிவேகமாக பந்துகளை வீசும் பந்துவீச்சாளர்கள் காலம், காலமாக பாகிஸ்தான் அணியில் இடம்பெற்று வருகிறார்கள். வாசீம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயிப் அக்தர், இம்ரான்கான் போன்ற அதிவேக பந்து வீச்சாளர்கள் ஒரு காலத்தில் எதிரணியினரை கலங்க வைத்திருந்தனர்.
இப்போதெல்லாம் அவர்களைப் போல மிகத் துல்லியமாக பந்து வீச்சாளர்களுக்கு பாகிஸ்தானில் பஞ்சம் ஏற்பட்டு விட்டது போன்ற எண்ணத்தினை உருவாக்கி விட்டதோ? சமீப காலங்களில் இருக்கும் பாகிஸ்தான் அணி என்ற அளவில் அவர்களது பந்து வீச்சு இருந்து வருவதாக நினைக்க வைத்து விட்டது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் போட்டித் தொடர் நடந்து வருகிறது.
முல்தான் மைதானத்தில் வைத்து நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி பரிதாபமாக தோற்றது. இரண்டாவது போட்டி மீண்டும் அதே முல்தான் மைதானத்தில் வைத்து நடந்து வருகிறது.
மூன்றாவது நாளான இன்று பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு மிக அபாரமானதாக அமைந்தது. பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் சாஜித் கான் சிறப்பாக பந்து வீசி ஏழு விக்கெட்டுகளை எடுத்தார். இருபத்தி ஆறு புள்ளி இரண்டு ஓவர்களை வீசி, நூற்றி பதினோறு ரன்களை கொடுத்திருந்தார்.
இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரரான டக்கெட் சதமடித்தார். நூற்றி இருபத்தி ஒன்பது பந்துகளை எதிர்கொண்டு நூர்றி பதினான்கு ரன்களை எடுத்தார். அவருக்கு அடுத்த படியாக ஜோரூட் முப்பத்தி நான்கு ரன்களை எடுத்திருந்தார். பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி காட்டிய திடீர் எழுச்சியால் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
இங்கிலாந்து அபி அறுபத்தி ஏழு புள்ளி இரண்டு ஓவர்களில் இருனூற்றி தொன்னூற்றி ஓரு ரன்களை எடுத்து ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸின் பேட்டிங்கை ஆடி வருகிறது. இருனூற்றி பதினான்கு ரன்களை ஐம்பத்தி ஆறு ஓவர்களில் எடுத்து எட்டு விக்கெட்டுகளை இழந்து தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது.
இங்கிலாந்தை விட இருனூற்றி என்பத்தி ஒன்பது ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது பாகிஸ்தான். இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதமிருப்பதால் வெற்றி என்பது இரு அணிகளில் யாருக்கேனும் கிடைக்கலாம் என்ற நிலை தான் இருக்கிறது இப்போது.