Connect with us

india

ஓடும் ரயிலில் பணியாளருக்கு பளார்…சம்பவம் செய்த சக ஊழியர்கள்…

Published

on

சைவ உணவிற்கு பதில் அசைவ உணவை பரிமாறிய பணியாளரை ரயில் பயணி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே ரயிலில் பயணம் செய்த சகபயணிகள் இந்த அடிதடியை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இப்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் ரயில் பயணங்களின் போது பயணிகள் விரும்பும் உணவை சமைத்து அவர்கள் இருக்கைக்கே வந்து கொடுக்கும் பழக்கம் சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து பயணத்தை சொகுசாக்க பல்வேறு வசதிகள் செய்யப்பட்டும் ரயில் பயணம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் ரயிலில் உள்ள உணவு பரிமாறும் ஊழியரிடம் தனக்கு தேவையான சைவ வகை உணவை ஆர்டர் செய்துள்ளது. ஆனால் அந்த ஊழியரோ தவறுதலாக வேறு ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய அசைவ வகை உணவினை இந்த பயணியிடம் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பயணிம் உணவு கொண்டு வந்த ஊழியருடன் வாக்கு வாததில் ஈடுபட்டுள்ளார்.

Vande Bharath

Vande Bharath

இரு கட்டத்தில் வாக்கு வாதம் முத்திப்போய் ஊழியரை வந்தே பாரத் ரயில் பயணி அவேசமாக அரைந்துள்ளார். இருவர்கள் இருவருக்குள் நடந்த இந்த மோதலை ரயிலில் பயணித்த சக பயணிகள் தங்களது செல்போன் கேமராக்களில் படம் பிடித்துள்ளனர். அதே நேரத்தில் ரயிலில் உணவு பரிமாறும் சக பணியாளர்கள் தாக்குதலுக்கு உள்ளான ஊழியருக்கு ஆதரவாக அந்த பயணியுடன் பயங்கர வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதன் பின்னர் அனைவரும் சமாதானம் அடைந்துள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ, இதைப்பார்த்தவர்களும், நெட்டிசன்களும் பாதிக்கப்பட்ட பணியாளருக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை பதிவிட்டடும், தாக்குதலில் ஈடுபட்ட பயணியை கண்டித்தும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

google news