Connect with us

india

அடேங்கப்பா… ஒரு முழு மானை விழுங்கிய மலைப்பாம்பு… மீட்க போராடிய மக்கள் வைரலாகும் வீடியோ…!

Published

on

மான் குட்டி ஒன்றை மலைப்பாம்பு விழுங்கிய நிலையில் அதனை மக்கள் போராடி மீட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இமாச்சல பிரதேசத்தின் உனா என்ற மாவட்டத்தில் பைத்தான் வகை பாம்பு ஒன்று மான்குட்டியை பிடித்து விழுங்கி இருக்கின்றது. இதனை பார்த்து உள்ளூர் மக்கள் மான் குட்டியை மீட்பதற்காக செயல்பட்டன. இது குறித்த வீடியோ ஒன்று இந்திய வன பணி அதிகாரி பர்வீன் கஸ்வான் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.

அதில் மலைப்பாம்பு விழுங்கி இருந்தால் மான் குட்டியை மீட்பதற்கு பலரும் போராடுகிறார்கள். இதை பகிர்ந்து அவர் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இயற்கை உலகில் இது போன்று தலையிடுவது சரியா? அவர்கள் சரியான செயலை செய்கிறார்களா? என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார். இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

புளு புல் வகையை சேர்ந்த இந்த மான் இனம் வன வாழ் பாதுகாப்பு சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்டியலில் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனை வேட்டையாடுவது சட்டவிரோதம். இந்த வீடியோவை பல லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு இருக்கிறார்கள்.  3000 மேற்பட்டோர் லைக் செய்து இருக்கிறார்கள். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *