india
கேரளாவுக்கு செல்லாதீர்கள்… தமிழக மாணவர்களுக்கு வந்த திடீர் நோட்டீஸ்…
கேரளா மாநிலத்திற்கு செல்ல வேண்டாம் என தமிழக மாணவர்களுக்கு திடீரென வந்திருக்கும் சுற்றறிக்கை குறித்த தகவல் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் சமீப காலமாக விதவிதமான காய்ச்சல்கள் வந்து மக்களை பயமுறுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கேரளா சுற்றுவட்டார பகுதிகளில் நிபா வைரஸ் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கேரளா மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பாண்டிக்கோடு பகுதியில் 14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
இதை எடுத்து அந்த பையனுடன் நேரடி தொடர்பில் இருந்த அவர்களது உறவினர் மற்றும் நண்பர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். சிலருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இருந்த நிலையில் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நிபா வைரஸ் தாக்கம் கேரளாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் கேரளாவை ஒட்டி இருக்கும் தமிழக மாவட்டங்களிலும் சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறை சார்பில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழக உயர்கல்வித்துறை அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் யாரும் கேரளாவிற்கு சுற்றுப்பயணம் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,