Connect with us

govt update news

உங்க சொந்த வீடு கனவு நினைவாக போகுது… அரசே எல்லாம் செய்து.. வந்தாச்சு புது லிஸ்ட்..!

Published

on

அரசு கொடுக்கும் இலவச வீடு தொடர்பான புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் அரசிடம் இருந்து சொந்தமாக வீடு வாங்கும் திட்டத்தில் உங்களுடைய பெயர் இருக்கின்றதா என்பதை நீங்கள் சரி பார்த்துக் கொள்ளலாம்.

அனைவருக்குமே சொந்த வீடு என்பது ஒரு கனவு. அது குடிசை வீடாக இருந்தாலும் சரி, ஓட்டு வீடாக இருந்தாலும் சரி, சொகுசு வீடாக இருந்தாலும் சரி நமக்கு என்று ஒரு சொந்த வீடு இருக்க வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். உண்மையில் வாழ்வதற்கு சொந்தமாக ஒரு வீடு இல்லாமல் நம் நாட்டில் பல குடும்பங்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக இந்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி இருக்கின்றது.

ஆவாஸ் யோஜனா திட்டம் தமிழ்நாட்டில் ஏழை குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கும் அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கும் இந்திய அரசால் தொடங்கப்பட்டது. இது ஒரு முக்கிய திட்டம். இந்த திட்டத்தின் நோக்கம் ஏழை மற்றும் வீடு தேவைப்படும் குடும்பங்களுக்கு வீடு கட்ட நிதி உதவி வழங்குவதாகும்.

இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற ஏழை குடும்பங்கள் தங்களது சொந்த வீடுகளை உருவாக்குவதற்கு நிதி உதவி வழங்குகின்றது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வீடு கட்ட அரசு பணம் வழங்கி வருகின்றது. சொந்த வீடு கட்ட அரசு அதிகபட்சமாக 1. 30 லட்சம் நிதி உதவி கொடுக்கின்றது. ஏனெனில் இந்த திட்டத்திற்கான புதிய பட்டியலை அரசு சமீபத்தில் வெளியிட்டிருக்கின்றது.

இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் நபர்களின் பெயர்கள் உள்ளன. இதனால் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் புதிய பயனாளிகளின் பட்டியலை எப்படி சரி பார்ப்பது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள் பெருமளவு பயன்படுகிறார்கள். நீங்கள் எந்த மாநிலத்தில் வசிப்பதாக இருந்தாலும் சரி இந்த திட்டத்தின் கீழ் பலன் பெற முடியும்.

இதன் மூலமாக 1.30 லட்சம் ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டுவதற்கு வழங்கப்படுகின்றது. அவர்களுடைய சொந்த வீடு கனவை நினைவாக்க இது உதவுகின்றது. லட்சக்கணக்கான ஏழை குடும்பங்களில் சொந்த வீடு கனவானது நினைவாகியுள்ளது. சமீபத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட நிதி உதவி வழங்கப்படும் அனைவரின் பெயர்களும் இடம்பெற்று இருக்கின்றனர்.

இதில் நீங்கள் விண்ணப்பித்திருந்தால் உங்கள் நிதி தொகைக்காக காத்திருந்தால் இந்த பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கின்றதா? என்பதை சரி பார்க்கலாம். அதற்கு முதலில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். முகப்பு பக்கத்தில் உள்ள Awassoft பிரிவில் “Report” என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களின் முன் ஒரு புதிய பக்கம் திறக்கும்.

அதில் நீங்கள் “Beneficiary Details For Verification” என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்ததாக மாநிலம் மாவட்டம், கிராமம் மற்றும் ஆண்டு ஆகியவற்றை தேர்ந்தெடுத்து கேப்சா குறியீட்டை உள்ளிட்டு சம்மிட் என்கின்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது “Beneficiary List” திரையில் தோன்றும். அதில் உங்களது பெயர் இருக்கின்றதா? என்பதை சரி பார்க்கலாம். பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு உங்களுக்கு நிதி உதவி விரைவில் கிடைக்கும்.

google news