india
பிரதமர் மோடி இலவச வீடு யாருக்கு கிடைக்கும்? என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா?
பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் 2015ம் ஆண்டு பிரதமர் மோடியால் அறிமுகம் செய்யப்பட்டது. வீடில்லாதவர்களுக்கு சொந்த வீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தில் யார் பயன் அடைவார்கள் என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் இந்திய மக்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும். வீடு இல்லதவர்களும், இரண்டு அறைகளில் வசிப்பவர்களும் இதில் விண்ணப்பிக்கலாம். உடல் திறன் கொண்ட உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் இந்த திட்டத்தில் வீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
ஆண்டு வருமானம் 3 லட்சத்தில் இருந்து 6 லட்சத்திற்குள் இருக்கும் இந்திய மக்கள் சொந்த வீடில்லாமல் இருந்தால் இதில் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்ட் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
ஆதார் எண், பயனாளிகளின் வேலை அட்டை எண், வங்கி எண், ஸ்வச் பாரத் மிஷன் எண், புகைப்படம் மற்றும் அலைப்பேசி எண் ஆகிய ஆவணங்களை கொண்டு https://pmaymis.gov.in இணையத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பின்னர் நீங்கள் இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டால் பட்டியலை rhreporting.nic.in இணையதளத்தில் காணலாம்.